மருத்துவ துறை அமைச்சு பணியாளர்கள் சங்கம் தமிழக முதல்வருக்கு கோரிக்கை

மருத்துவ துறை அமைச்சு பணியாளர்கள் சங்கம் தமிழக முதல்வருக்கு கோரிக்கை
X

பைல் படம்

அனைத்து அரசு பணியாளர்களின் வயது வரம்பை 58ஆக உயர்த்தி ஓய்வூதிய திட்டம் பழைய நடைமுறைக்கு கொண்டுவர வேண்டுமென கோரிக்கை

தமிழ்நாடு மருத்துவ துறை அமைச்சு பணியாளர்கள் நல சங்கம் முதல்வருக்கு பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறை படுத்த கோரிக்கை.

மதுரை மாவட்டம் தமிழ்நாடு மருத்துவ துறை அமைச்சு பணியாளர்கள் நல சங்கம் தலைவர் இரா. கலாமோகன் தமிழக முதல்வருக்கு விடுத்துள்ள கோரிக்கை: அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்துவது மற்றும் ஓய்வு பெறும் வயதை மீண்டும் 58 ஆக மாற்றி அறிவிக்க வேண்டும்.தமிழக அரசு தலைமையில் இயங்கிவரும் அரசு மருத்துவமனை,மற்றும் அனைத்து அரசு அலுவலகங்கள் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு இயங்கி வருகிறது. அமைச்சரவை பொது மக்களுக்கு மட்டுமல்லாது அரசு ஊழியர்களுக்கும் சிறந்த பாதுகாப்பு அரணாக உள்ளது தற்போது தமிழக அரசு. இந்நிலையில் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை உடனே நிறைவேற்றும் அரசாக இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது..

அரசு ஊழியர்களின் வாழ்வாதார கோரிக்கைகளில் முக்கியத்துவம் வாய்ந்த நீண்ட நாள் கோரிக்கையான தமிழ்நாடு மருத்துவத் துறை அமைச்சு பணியாளர்கள், மற்றும் அனைத்து அரசு ஊழியர்கள் கோரிக்கையாக பழைய ஓய்வு திட்டத்தை நடைமுறைப்படுத்தி மேலும் ஊழியர்களின் வயதை மீண்டும் 58 ஆக மாற்றி அமைக்க வேண்டும். அனைத்து அரசு ஊழியர்களுக்கும் செய்து தருமாறும் இது இளைஞர்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதுடன் பல குடும்பங்களின் பொருளாதார வளர்ச்சிக்கும் வித்திடும். என்பதால் இக்கோரிக்கையை தமிழக முதல்வர் மு .க. ஸ்டாலின் இக்கோரிக்கையை நிறைவேற்ற வேண்டுமென அதில் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
why is ai important to the future