/* */

தனியாருக்கு கைமாறிய மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நிலங்கள் மீட்பு: அதிகாரிகள் அதிரடி

உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான ரூ 25 கோடி மதிப்புள்ள நிலங்களை அதிகாரிகள் அதிரடியாக மீட்டனர்

HIGHLIGHTS

தனியாருக்கு கைமாறிய மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நிலங்கள் மீட்பு: அதிகாரிகள் அதிரடி
X

 மீனாட்சியமன்கோயில் கோபுரம்(பைல் படம்)

மதுரை சிம்மக்கல் அனுமார்கோயில் படித்துறை அருகே மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சொந்தமான 1366 சதுர அடி பரப்பளவு கொண்ட கட்டிடத்தை வணிக பயன்பாட்டிற்காக குணசேகரன் என்பவர் கோயில் நிர்வாகம் சார்பாக வழங்கப்பட்டிருந்தது.

சமீபத்தில், அந்த இடத்தை அதிகாரிகள் ஆய்வு செய்த பொழுது கோயில் இடத்தை சட்ட விரோதமாக ராஜேந்திரன் என்பவர் பயன்படுத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அந்த இடத்தை இரண்டு பகுதிகளாக பிரித்து கழிப்பறை, குளியலறை கட்டணம் வசூல் செய்தும், உணவகம் அமைத்தும் நடத்தி வந்துள்ளனர். இதனையடுத்து அந்த இடத்திற்கு செலுத்த வேண்டிய வரி பாக்கி தொகையை 3 லட்சத்து 91ஆயிரத்து 768 ரூபாயை செலுத்தக் கோரி கோயில் நிர்வாகத்தின் சார்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

கோயில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து வணிக பயன்பாட்டிற்கு உள்வாடகைக்கு விட்டது. தெரியவந்தது இதனைத் தொடர்ந்து அங்கு சென்ற கோயில் அதிகாரிகள் 1 கோடியே 36 லட்சம் மதிப்பிலான 1366 சதுர அடி பரப்பளவு கொண்ட இடத்தை மீட்டனர். மேலும் அந்த கடைகளுக்கு சீல் வைத்து அங்கு உள்ள அறையில் இருந்த ஒரு அடி நீள பித்தளை சூலம், கையடக்க கலசம், விபூதி கொப்பரை ஆகியவற்றை மீட்டுச் சென்றனர். மதுரையின் மையப்பகுதியில் ஆக்கிரமிப்பில் இருந்த மீனாட்சி கோயில் சொத்தை மீட்ட அதிகாரிகளுக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்தனர்.

இந்நிலையில் மதுரை மாவட்டம் மேற்கு தொகுதிக்கு உட்பட்ட பொன்மேனி பகுதியில் சுமார் 21.46 ஏக்கர் பரப்பளவில் கோயிலுக்கு சொந்தமான நஞ்சை நிலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, இதனை கோயில் துணை ஆணையர் அருணாச்சலம் தலைமையிலான குழுவினர் கண்டறிந்து அங்கு கோயிலுக்கு சொந்தமான நிலம் என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது,மேலும் இந்த சொத்தின் தற்போதைய மதிப்பு சுமார் 21 கோடியே 46 லட்சம் ரூபாய் எனவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.இது மட்டுமல்லாமல் கடந்த வாரம் கோயிலுக்கு சொந்தமான 2 கோடி ரூபாய் மதிப்பிலான வணிக நிறுவனம் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Updated On: 25 May 2022 5:30 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    அச்சம் தந்த அக்னி..! பயணிகள் பேருந்து தீவிபத்தில் 10 பேர் கருகி...
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதையில் இருசக்கர வாகனத்தை திருட முயன்றவர்களை போலீசில்...
  4. திருவள்ளூர்
    திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு ஒத்திகை விழிப்புணர்வு...
  5. இந்தியா
    நடிகை ராஷ்மிகா பாராட்டு! பிரதமர் மோடி நெகிழ்ச்சி!
  6. உலகம்
    59 ஆண்டு கால 'லீ' அரசியல் சகாப்தம் முடிவுக்கு வந்தது எப்படி?
  7. திருவள்ளூர்
    ஆசிரியர்கள் - முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி!
  8. ஈரோடு
    சத்தி அருகே ஆம்னி வேனில் கடத்திய 16 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
  9. பூந்தமல்லி
    கூவம் ஆற்றின் அருகே வீடுகளை அப்புறப்படுத்த நோட்டீஸ்: மக்கள் சாலை...
  10. இந்தியா
    கேதார்நாத் கோயில் நடை திறப்பு!