'லொட லொட' டவுன் பஸ்சில் பலகை 'டமார்' - வாலிபர் படுகாயம்

லொட லொட டவுன் பஸ்சில் பலகை டமார் - வாலிபர் படுகாயம்
X

பஸ்சினுள் சேதமடைந்த பகுதி.

மதுரையில், ஓடிக்கொண்டிருந்த அரசு பேருந்தின் தரைப்பலகை உடைந்து, வாலிபர் காயமடைந்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை, வேம்படியில் இருந்து பெரியார் பேருந்து நிலையத்திற்கு நேற்று அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. மதுரை மேல வெளி வீதியில் வந்து கொண்டிருந்த போது, பேருந்தின் பின்சக்கரத்தின் டயர் வெடித்தது. இதில், அரசு பேருந்தில் பின்பகுதியில் டயரின் மேலே இருந்த பலகை மீதுள்ள இருக்கையில் அமர்ந்திருந்த பொன்ராஜ் என்பவரின் மகன் திருநாவுகரசு பகுதி பலகை உடைந்தது.

இதில், அவரது கணுக்காலில் உரசியதால் காயம் அடைந்தார். இதனையடுத்து, திருநாவுக்கரசை சிகிச்சைக்காக 108 ஆம்புலன்சு மூலம் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். பேருந்தினுள் பலகை உடைந்து, வாலிபர் காயமடைந்தது, சக பயணிகள் மத்தியில் அச்சத்தை ன் பயணித்துக் கொண்டிருந்தபோது வாலிபருக்கு ஏற்பட்ட விபத்து பேருந்து பயணிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story