பாஜக மாவட்டத்தலைவர் உள்ளிட்ட 50 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு

பாஜக மாவட்டத்தலைவர் உள்ளிட்ட 50  பேர் மீது  போலீஸார் வழக்கு பதிவு
X
மதுரை பாஜக நிர்வாகிகள், டாக்டர் சரவணன், மாரிதாஸ் உட்பட 50 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் திருப்பாலை போலீசார் வழக்கு பதிவு

மதுரை தல்லாகுளம் பகுதியில் பாஜக மாவட்டத் தலைவர் உள்ளிட்ட 50 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் நேற்று வழக்கு பதிவு செய்தனர்.

மாரிதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் மாநிலத்தின் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் மாநில அரசுக்கு எதிராகவும் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி வழக்கறிஞர் ராமசுப்பிரமணியன் என்பவர் சைபர் கிரைம் காவல்துறையினரிடம் அளித்த புகாரின் அடிப்படையில் நான்கு பிரிவுகளின் கீழ் மாரிதாஸ் கைது செய்யப்பட்டு வரும் 23ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார்.

இவரை கைது செய்ய காவல்துறையினர் சென்றபோது காவல்துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்ததோடு கூட்டத்தை கூட்டி தொற்று நோய் பரவலுக்கு வழிவகுத்தது உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் மதுரை மாநகர் பாஜக தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் சரவணன் மற்றும் பாஜகவினர் 50 பேர் மீது திருப்பாலை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Tags

Next Story
மல்லசமுத்திரத்தில் கொப்பரை வர்த்தகம்: விவசாயிகள் சந்தித்த நன்மைகள்