அரசு பேருந்து நடத்துனரின் பணப்பை திருட்டு

அரசு பேருந்து நடத்துனரின் பணப்பை திருட்டு
X
மதுரை ஆரப்பாளையம் பகுதியில் அரசு பேருந்து நடத்துனர் பணப்பை திருட்டு போலீசார் வழக்கு பதிவு

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் விஜயராகவன். இவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து பேருந்து நடத்துநராக பணியாற்றி வருகிறார்.

திண்டுக்கல்லில் இருந்து மதுரை வந்த அரசு பேருந்தில் நடத்துநராக வந்த அவர், மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திற்கு வந்த போது, தன்னுடைய இருக்கையில் முன்பக்கம் வைத்து இருந்த பயணிகள் வசூல் பணத்தை வைத்து இருந்த கைப்பையை மர்ம நபர் திருடி சென்றுள்ளனர்.

அவரது கைப்பையில் பயணிகளிடம் அவர் பெற்ற சுமார் 14 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணமும் இருந்தது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து நடத்துனர் விஜயராகவன் கரிமேடு காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணப்பையை திருடிய மர்ம நபரை தேடி வருகின்றனர் .

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!