இந்துக் கடவுளை இழிவு படுத்தியதாக திராவிட கழகத்தினர் மீது போலீசார் வழக்கு பதிவு.

இந்துக் கடவுளை இழிவு படுத்தியதாக திராவிட கழகத்தினர் மீது போலீசார் வழக்கு பதிவு.
X
Case Status By Police Station - மதுரையில் நடந்த செஞ்சட்டை பேரணியில் இந்து கடவுள்களை இழிவுபடுத்தி யதாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்

Case Status By Police Station - மதுரையில் கம்யூனிஸ்ட், வி.சி.க, திராவிடர் கழகம் சார்பில் செஞ்சட்டை பேரணி நடைபெற்றது. கம்யூனிஸ்ட் எம்பி வெங்கடேசன் தலைமையில் நடைபெற்ற இந்தப் பேரணியில் கடவுள்களை அவமதித்து கோஷம் எழுப்பப்பட்டதாக சொல்லப்படுகிறது.

இது தொடர்பாக தெப்பக்குளம் காவல்நிலையத்தில் இந்து மக்கள் கட்சி மற்றும் இந்து முன்னணியினர் புகார் அளித்துள்ளனர். அதில், மதுரை பைபாஸ் ரோட்டில் மே 29ல் நடந்த செஞ்சட்டை பேரணியில் பங்கேற்றவர்களில் சிலர், இந்து சமுதாயத்தையும், இந்து கடவுள்களையும் இழிவான வார்த்தைகளால் வசைபாடி பாடல்களை பாடியும், கோஷமிட்டும் சிலர் பேரணியில் வந்தாக குறிப்பிட்டுள்ளனர்.

குறிப்பாக, கடவுள் கண்ணனையும், சுவாமி ஐயப்பனையும் இழிவுபடுத்தியதாகவும், கடவுள் முருகனுக்கு நேர்ச்சை செய்யும் சடங்குகளையும் கொச்சைப்படுத்தியதாகவும் புகார் தெரிவித்துள்ளனர்.அமைதியான சமுதாயத்தில் கலவரத்தை துாண்டிவிட்டு குளிர்காய நினைக்கும் கம்யூனிஸ்ட், வி.சி.க., திராவிடர் கழகம் மீதும், இழிவாக கோஷமிட்டவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும், எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் புகாரின் அடிப்படையில் மதுரை எஸ்.எஸ். காலனி போலீசார் திராவிடர் கழகத்தினர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா