மதுரையில் பயணிகள் கவனத்தை திசை திருப்பி திருட்டு : 3 பேர் கைது

பைல் படம்
மதுரை அண்ணாநகர் சரகத்திற்கு உட்பட்ட அண்ணா நகர் மற்றும் கேகே நகர் பகுதிகளில் பூட்டியிருக்கும் வீட்டின் கதவை உடைத்து நகைகள் மற்றும் பணத்தை கொள்ளை அடிக்கும் சம்பவத்தில் ஈடுபடுபவர்கள் மற்றும் பேருந்துகளில் பயணிகள் கைகளில் கொண்டு வரும் நகைகள் மற்றும் பணத்தை திருடும் சம்பவம் தொடர்ந்து நடந்து வந்து.
இந்த நிலையில் அதில் ஈடுபட்ட குற்றவாளிகளை கண்டறிய மதுரை மாநகர காவல் ஆணையர் பிரேமானந்த் சின்காவின் உத்தரவின் பேரில் காவல் துணை ஆணையர் வடக்கு ராஜசேகரன் நேரடி பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டு அண்ணாநகர் சரக காவல் உதவி ஆணையர் சூரக்குமார் மற்றும் ஆய்வாளர்கள் பாண்டியன் மற்றும் பாலமுருகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வந்தனர்.
,இந்த நிலையில் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த மொய்தீன் மற்றும் அவனுடைய தம்பி சாதிக்பாட்சா மற்றும் மதுரை மாவட்டம் அலங்காநல்லூரை சேர்ந்த கோபிநாத் ஆகியோர்களை பிடித்து விசாரணை செய்தனர்.
விசாரணையில் பூட்டியிருக்கும் வீடுகளை உடைத்து மற்றும் பேருந்தில் வரும் பயணிகளிடம் உள்ள கைகளில் உள்ள நகைகள் மற்றும் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து உள்பட 7 வழக்குகளில் தொடர்புடையவர்கள் என தெரியவந்தது.
மூன்று குற்றவாளிகளிடம் இருந்து சுமார் ரூபாய் 18 லட்சம் மதிப்புள்ள 45 சவரன் தங்க நகைகள் மற்றும் ரொக்கப்பணம் ரூபாய் 80,000 பணம் போலீசார் பறிமுதல் செய்தனர்.
இந்த குற்ற வழக்குகளில் சிறப்பாக செயல்பட்டு நகைகள் மற்றும் பணத்தை மீட்டு காவல் உதவி ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் தலைமை காவலர்கள் போஸ், வெங்கட் ராமன், மற்றும் காவலர்கள் முத்துக்குமார் மற்றும் லட்சுமணன் ஆகியோரை மதுரை மாநகர காவல் ஆணையர் பாராட்டினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu