சுங்க அலுவலகத்தை கோவைக்கு மாற்ற வர்த்தக சங்கம் எதிர்ப்பு

சுங்க அலுவலகத்தை கோவைக்கு மாற்ற வர்த்தக சங்கம் எதிர்ப்பு
X

பைல் படம்

மதுரை மத்திய கலால், மறைமுக வரிகள், சுங்க வாரியத்தின் மதுரை மண்டல மேல்முறையீட்டு அலுவலகத்தை கோவைக்கு மாற்ற எதிர்ப்பு

மதுரை, மத்திய கலால், மறைமுக வரிகள், சுங்க வாரியத்தின் மதுரை மண்டல மேல்முறையீட்டு அலுவலகத்தை கோவைக்கு மாற்றும் திட்டத்திற்கு தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சங்க தலைவர் ஜெகதீசன் கூறியதாவது: மத்திய கலால், மறைமுக வரிகள், சுங்க வாரிய தலைமை கமிஷனர் உத்தரவில் சேலம், மதுரை, திருச்சியில் மேல் முறையீட்டு அலுவலகம் செயல்படுகிறது.தென்மாவட்ட வணிகர்கள், ஏற்றுமதி, இறக்குமதியாளர்கள் பயன்பெற மதுரையில் முறையீட்டு அலுவலகம் அமைக்க முயற்சித்தோம்.

வணிகர்கள் ஜி.எஸ்.டி., கலால், சுங்க வரி சார்ந்த வழக்குகளை மேல்முறையீட்டு அலுவலகத்தில் தாக்கல் செய்து பயன் பெறுகிறார்கள்.250க்கும் மேற்பட்ட ஜி.எஸ்.டி., 800க்கும் மேற்ப்பட்டமத்திய கலால், சுங்க வரி வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் அலுவலகத்தை கோவைக்கு மாற்றினால், தென் மாவட்ட வணிகர்கள் மிகவும் சிரமப்படுவர். கோவை செல்லும் சூழல் ஏற்படுவதால் கூடுதல் செலவு, நேரம் வீணாகும்.எனவே, மதுரை மத்திய கலால் கமிஷனர் அலுவலகத்தில் செயல்படும் மண்டல மேல் முறையீட்டு அலுவலகம் தொடர்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா