ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க ஆன்லைன் பதிவு: சரிபார்க்கும் பணி தொடக்கம்

ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க   ஆன்லைன் பதிவு: சரிபார்க்கும் பணி தொடக்கம்
X

மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர்

அவனியாபுரம் அலங்காநல்லூர் பாலமேடு ஜல்லிக்கட்டில் பங்கேற்க இணையத்தில் 4,544 காளைகள் 2001 மாடுபிடி வீரர்கள் பதிவு செய்தனர்

மதுரை மாவட்டத்தில் தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற இருக்கும் நிலையில் இப்போட்டிக்காக அரசு இணையதளத்தில் 4 ஆயிரத்து 544 காளைகள் போட்டியிடுவதற்காக உரிமையாளர்களால் சான்று பதிவு செய்யப்பட்டு உள்ளன.மேலும் 2001 மாடுபிடி வீரர்கள் ஜல்லிக்கட்டில் கலந்து கொள்வதற்காக அரசு இணையதளத்தில் பதிவு.

இந்நிலையில் ஜல்லிக்கட்டு காளை உரிமையாளர்கள் சான்றுகளையும், மாடுபிடி வீரர்களான பதிவு சான்றுகளையும் அதன் விபரங்களையும் சரிபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது. மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர் அறிவித்துள்ளார்.

Tags

Next Story