மதுரையில் சோகம்: கொசுவர்த்தி சுருளில் இருந்து தீப்பற்றி ஒருவர் பலி

மதுரையில் சோகம்: கொசுவர்த்தி சுருளில் இருந்து தீப்பற்றி ஒருவர் பலி
X
மதுரை சிந்தாமணியில், இரவு தூங்கும் போது கொசுவர்த்தி சுருளிலிருந்து தீப்பற்றி ஒருவர் பலியானார்.

மதுரை சிந்தாமணி வா.உ.சி 2-வது தெருவை சேர்ந்தவர் இளங்கோ, வயது 45, இவர் தெற்கு வெளிவீதியில் உள்ள ஒரு பள்ளி அருகே தூங்கிக் கொண்டு இருந்துள்ளார். கொசு அதிகமாக இருந்த நிலையில், அருகில் கொசுவர்த்தி சுருளை பற்ற வைத்து உறங்கினார்.

அப்போது, எதிர்பாராதவிதமாக கொசுவர்த்தி சுருளில் இருந்து நெருப்பு , இளங்கோவனின் உடையில் பற்றி எரிந்தது. இதில் தீயில் கருகிய இளங்கோவை, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சையில் இருந்த இளங்கோ சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து மதுரை தெற்குவாசல் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story