மதுரைக்கு ஆயிரம் கோடியில் பெருந்திட்டம் தயாரிப்பு: அமைச்சர் மூர்த்தி தகவல்

மதுரைக்கு ஆயிரம் கோடியில் பெருந்திட்டம் தயாரிப்பு: அமைச்சர் மூர்த்தி  தகவல்
X

அமைச்சர் பி. மூர்த்தி

இத்திட்டத்தின் மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் மதுரை நகரம் புதுப்பொலிவு பெறுவதுடன் போக்குவரத்து நெரிசலும் குறைக்கப்படும்.

மதுரைக்கு ஆயிரம் கோடியில் பெருந்திட்டம் தயாரித்து அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அமைச்சர் மூர்த்தி தகவல் தெரிவித்தார்.

மதுரை மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டத்தின் நிறைவில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: மதுரை நகரின் விரிவாக்கத்திற்கு மாவட்ட நிர்வாகத்தால் ரூ 1000 கோடியில் புதிய திட்டம் தயாரிக்கப்பட்டு அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மதுரை நகர் பகுதியான 25 கிலோ மீட்டர் சுற்றளவில் விரிவாக்கம் செய்யும் வகையில், பல்வேறு நவீன வசதிகளுடன் ஒரு ஆயிரம் கோடியில் திட்டம் தயாரிக்கப்பட்டு அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்திற்கு தமிழக முதல்வரின் ஒப்புதலைப் பெற்று விரைவில் அதற்கான பணிகள் தொடங்கப்படும். இத்திட்டத்தின் வாயிலாக அடுத்த 5 ஆண்டுகளுக்கு மதுரை நகரம் முழுவதும் புதிய் பொலிவு பெரும் வகையில் போக்குவரத்து நெரிசல் குறைக்கப்படும். மதுரை நகரின் பல்வேறு பகுதிகளிலும் புதிய சாலைகள் அமைக்க வேண்டியுள்ளது பணிகளை துரிதப்படுத்தி மாநகராட்சிகளிலும் டிசம்பர் இறுதிக்குள் பணிகள் அனைத்தும் முடிக்கப்படும்.

திருமங்கலம் மற்றும் தொகுதி உள்ளூர் மக்களிடம் கப்பலூர் சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க கூடாது என ஏற்கெனவே அறிவித்துள்ளோம்.கண்காணிப்பு குழு கூட்டத்தில் இப்பிரச்னை குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. மாவட்ட ஆட்சியர் மூலமாக சுமூக தீர்வு காண அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன என்று கூறினார்.


Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil