மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஒமிக்ரான் சிறப்பு வார்டு

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஒமிக்ரான் சிறப்பு வார்டு
X

கோப்பு படம் 

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஒமிக்ரான் வைரஸ் சிகிச்சைக்காக, சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில், ஒமிக்ரான் வைரஸ் பாதிப்புக்கு சிகிச்சை அளிக்க, சிறப்பு வார்டு அமைக்கப்பட்டு உள்ளது. 30 படுக்கைகள் கொண்ட அதிதீவிர சிகிச்சைப் பிரிவில், இந்த சிறப்பு வார்டு அமைக்கப்பட்டு உள்ளது.

இம்மருத்துவமனையில் ஒமிக்ரான் பிரிவு சிறப்பு வார்டில் 24 மணி நேரமும் சிகிச்சை அளிக்க, 16 பேர் கொண்ட மருத்துவர்கள் குழு தயார் நிலையில் உள்ளது. மேலும் நோயாளிகள் பாதுகாப்பாக இருக்கவும், அடிப்படை வசதிகள் கொண்ட வார்டு ஆகும் .இந்த வார்டில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை. நோயாளிகள், உதவியாளர் தேவைக்கு ஏற்ப அனுமதிக்கப்படுவர் மக்களின் நலன் கருத்தில் கொண்டு தமிழக அரசு, இதனை ஏற்படுத்தி உள்ளதாக, மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Tags

Next Story