மதுரை சிறையிலுள்ள இரு கைதிகளிடம் என்.ஐ.ஏ விசாரணை

மதுரை சிறையிலுள்ள இரு கைதிகளிடம் என்.ஐ.ஏ விசாரணை
X

பைல் படம்

மதுரை சிறையில் உள்ள 2 கைதிகளிடம் தேசிய புலனாய்வுப் பிரிவு(என்ஐஏ ) அதிகாரிகள் 5 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை

மதுரை மாவட்டத்தில் இலங்கை வாழ் தமிழர்களை கனடாவுக்கு திருட்டுத்தனமாக அனுப்ப முயன்ற வழக்கில், மதுரை சிறையில் உள்ள இரு கைதிகளிடம் தேசிய புலனாய்வுப் பிரிவு (என். ஐ.ஏ) அதிகாரிகள் 5 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை செய்தனர். இலங்கையில் இருந்து கள்ளத்தனமாக இந்தியா வழியாக கனடா செல்ல திட்டமிட்டு வந்த இலங்கை தமிழர்கள் மதுரையில் தங்கி இருந்தனர்.

அவர்கள் கனடா செல்ல உதவியாக செயல்பட்டவர்கள் உள்ளிட்ட 9 பேரை கியூ பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதே வழக்கில் தொடர்புடைய 23 பேர், சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களில் மதுரை சிறையில் உள்ள தூத்துக்குடியை சேர்ந்த ஆனந்தராஜ் ஸ்டார்வின் ஆகியோரிடம், இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையில் என்.ஐ.ஏ குழுவினர். நீதிமன்ற அனுமதி பெற்று சிறையில் கண்காணிப்பாளர் அறையில் நேற்று 5 மணி நேரத்திற்கு மேல் விசாரணை நடத்தினர். அப்போது சிறை அதிகாரிகள் அனுமதிக்கப்படவில்லை

Tags

Next Story