போக்குவரத்து காவல்துறை விதிக்கும் அபராதத் தொகையை செலுத்த புதிய மையங்கள்

போக்குவரத்து காவல்துறை விதிக்கும் அபராதத் தொகையை செலுத்த புதிய மையங்கள்
X
மதுரை போக்குவரத்து போலீஸார் விதிக்கும் அபராதத் தொகையை சுலபமாக செலுத்த புதிய மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன

மதுரை மாநகரை போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டுநர்கள் மீது மோட்டார் வாகன சட்டப்படி இ- சலான்( E Challan ) மிஷின் வாயிலாக வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராதம் வசூலிக்கப்பட்டு வரப்படுகிறது.

போக்குவரத்து காவல் துறை சார்பாக நகரில் போக்குவரத்து விதி மீறலுக்கான வாகன ஓட்டிகள் மீது விதிக்கப்பட்ட அபராதத் தொகையை இதுவரை வழக்குப்பதிவு செய்த காவல்துறை மற்றும் இ -சேவை மையம் ஆகிய இடங்களில் மட்டும் செலுத்தும் வசதி இருந்து வந்தது.

வாகன ஓட்டிகளுக்கு அபராத தொகை செலுத்துவதில் இருந்த சிரமங்களை நீக்கும் பொருட்டு அதனை எளிதாக செலுத்தும் வகையில் மதுரை மாநகர காவல் ஆணையர் சைலேந்திரபாபு அவர்களது முயற்சியில் 14.9 முதல் UPI வசதியான 1.paytm,2.Google pay,3.phone pay,internet banking மற்றும் தமிழகம் முழுவதும் பதிவு செய்யப்படும்.

மோட்டார்வாகன வழக்குகளில் அபராத தொகையை தமிழகத்தின் எந்த ஒரு காவல் அதிகாரியிடம் செலுத்தக்கூடிய வசதிகள் ஏற்படுத்தி மேலும் அதனை நடைமுறையில் இருந்து வருகிறது .இதனை தொடர்ந்து மதுரை மாநகரில் தற்போது கூடுதலாக நிலுவையில் உள்ள அபராத தொகையை செலுத்துவதற்கு வாகன ஓட்டிகளுக்கு வசதியாக கீழ்க்கண்ட ஐந்து பூதங்களில் அபராதத் தொகை செலுத்த மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் வழக்கு பதிவு செய்த சம்பந்தப்பட்ட சார்பு ஆய்வாளர் மற்றும் ஆய்வாளர் ஆகியோரால் விதி மீறுவோர் இன் அலைபேசிக்கு குறுஞ்செய்தி எஸ்எம்எஸ் அனுப்பவும் தினசரி பத்திரிக்கை மற்றும் உள்ளூர் தொலைக்காட்சியில் அதனை வெளியிடவும் உத்தேசிக்கப்பட்டு உள்ளது. அபராத தொகை வசூலிக்கப்படும் பூத் மையம் .

1.கோரிப்பாளையம் சந்திப்பு காவல் பூத், 2.கட்டபொம்மன் சிலை சந்திப்பு காவல் பூத் ,3.தெற்கு வாசல் சந்திப்புகள் பூத், .4.தெப்பக்குளம் சந்திப்புகள் பூத், 5. பூ மார்க்கெட் சந்திப்புகள் என ஐந்து இடங்களில் வாகன ஓட்டிகள் மேற்படி புதிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு தங்களுக்கு வசதியான மையத்தில் அபராத தொகையை செலுத்தி தொடர் சட்டநடவடிக்க தவிர்க்க வேண்டுமென காவல்துறை கோரிக்கை வைத்துள்ளது.

Tags

Next Story