மேம்பால கட்டுமான நிறுவனத்துக்குஅபராதம் விதித்த தேசிய நெடுஞ்சாலைத்துறை

மேம்பால கட்டுமான நிறுவனத்துக்குஅபராதம் விதித்த தேசிய நெடுஞ்சாலைத்துறை
X
மேம்பாலம் இடிந்து விபத்துக்குள்ளானது தொடர்பாக கட்டுமான நிறுவனத்துக்கு 3 கோடி அபராதம் விதித்து நெடுஞ்சாலைத்துறை உத்தரவு

மதுரையில் மேம்பாலம் இடிந்து விபத்துக்குள்ளானது தொடர்பாக கட்டுமான நிறுவனத்துக்கு 3 கோடி அபராதம் விதித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது

மதுரையில் தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் கட்டப்பட்டு வந்த பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விபத்துக்குள்ளானதில் உ.பி-ஐ சேர்ந்த தொழிலாளி உயிரிழந்தார்,


தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் ரூ.544 கோடி மதிப்பில் மதுரை தல்லாகுளம் முதல் செட்டிகுளம் வரை 7.3 கிலோ மீட்டருக்கு மேம்பாலம் அமைக்கும் பணிகள் கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் துவங்கப்பட்டது. மதுரை நகருக்குள் இருந்து திருச்சி, சென்னை மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள் நெரிசல் இன்றி விரைவாக செல்லும் நோக்கில் இந்த பாலம் கட்டப்படுகிறது. 2022 ஏப்ரல் மாதம் பணிகளை முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிட்டிருந்தனர்.

மும்பையை சேர்ந்த ஆஷிஷ் தாகூர் என்பவருக்கு சொந்தமான JMC projects india lmt என்ற ஒப்பந்த நிறுவனம் கட்டுமான பணிகளை மேற்கொண்டுள்ளது. Yongma - sterling authority engineering என்ற தனியார் நிறுவனத்தை சேர்ந்த அணில் குமார் ஷர்மா என்பவர் தேசிய நெடுஞ்சாலை துறை சார்பாக பணிகளை ஒருங்கிணைத்து வந்துள்ளார்.

இதன் இரண்டு புறமும் இரு இணைப்பு (சர்வீஸ் பாலம்) பாலங்கள் கட்டப்படுகின்றன. இதில், நகருக்குள் செல்பவர்களுக்காக கட்டப்படும் 335 மீட்டர் நீளமுள்ள ஒரு சர்வீஸ் பாலத்தில் நாகனாகுளம் அருகே விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த சர்வீஸ் பாலம் கட்டுவதற்கு 35 மீட்டர் இடைவெளியுடன் தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு தூணுக்கும் மற்றொரு தூணுக்கும் இடையே 35 மீட்டர் நீளமுள்ள பாலத்தின் ஒரு பகுதியை தூணுடன் இணைக்கும் போது விபத்து ஏற்பட்டுள்ளது. பாலத்திற்கும், தூணிற்கும் பேரிங் மூலம் இணைப்பு ஏற்படுத்துவதற்கு, ஹைட்ராலிக் இயந்திரம் மூலம் பாலத்தை தூக்கியுள்ளனர். அப்போது ஹைட்ராலிக் இயந்திரம் உடைந்த காரணத்தால் விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த பணியில் பாலத்தின் மீது ஒரு நபரும், கீழே ஒருவரும் பணியாற்றி உள்ளனர். மேலே பணியாற்றியவர் உத்தர பிரதேசத்தை சேர்ந்த ஆகாஷ் சிங் என்ற 26 வயது இளைஞர் கை துண்டாகி கீழே விழுந்து பலியான நிலையில், கீழே பணியாற்றிய சரோஜ் குமார் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினார்.

விபத்து குறித்து நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், காவல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

சம்பவத்தை நேரில் ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியதாவது, பாலம் இடிந்து விழவில்லை. ஹைட்ராலிக் தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே விபத்து ஏற்பட்டுள்ளது.

பெரிய பணியில் 2 ஊழியர்களை மட்டுமே ஏன் ஈடுபடுத்தப்பட்டனர் என்ற கேள்வி எழுந்துள்ளது. தொழிலாளர்களுக்கு உரிய பயிற்சி வழங்கப்படாமல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பணிக்கு பயன்படுத்தும் இயந்திரங்களை முறையாக பராமரிக்காமல் இருந்ததும் விபத்துக்கு காரணமாக இருந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மூலம் ஒப்பந்ததாரரிடம் விசாரணை நடத்தப்படும் என தெரிவித்து இருந்தார்

தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் , இந்த வேலை நடந்து கொண்டு இருந்த பொழுது இரண்டு பேர் மட்டுமே பணியில் இருந்ததாக அதிகாரிகள் கூறுகிறார்கள். இவ்வளவு பெரிய பணியில் இரண்டு பேர் மட்டுமே இருந்ததாக கூறுவது சந்தேகத்தை எழுப்புகிறது என தெரிவித்து இருந்தார்

.மிகக்குறைந்த தொழிலாளர்களை ஈடுபத்தியது தான் விபத்துக்கு காரணமா? என்ற கேள்வி எழுகிறது. இரண்டாவது, தொழிலாளர்களின் பாதுகாப்பு தொடர்பான விதிமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டனவா? என்ற கேள்வியும் எழுகிறது.இவைகள் குறித்தும், விபத்தின் முழுத்தன்மை குறித்தும் மாவட்ட ஆட்சியர் முழு விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்து இருந்தார்

இந்நிலையில் மும்பையை சேர்ந்த ஆஷிஷ் தாகூர் என்பவருக்கு சொந்தமான JMC projects india lmt என்ற ஒப்பந்த நிறுவனத்திற்கு 3 கோடி அபராதம் விதித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது

Next Story
ai solutions for small business