மதுரை விமான நிலையத்தை சர்வதேச நிலையமாக அறிவிக்க தென்மாவட்ட எம்பிக்கள் மனு
மதுரையிலிருந்து அபுதாபி, மஸ்கட் ,சிங்கப்பூர் ,கோலாலம்பூருக்கு விமானங்களை இயக்க முன்னுரிமை வழங்கப்படும் என மத்திய அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா தகவல் தெரிவித்துள்ளார் .
மதுரை சர்வதேச விமான நிலையமாக அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளோடு ஒன்றிய அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியாவை மக்களவை உறுப்பினர்கள் மதுரை சு வெங்கடேசன் விருதுநகர் மாணிக் தாகூர் ஆகியோர் நேரில் சந்தித்தனர் .
அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து கையெழுத்திட்ட கடிதத்தினை வழங்கினர். அதற்கு அவர், மதுரை கஸ்டம்ஸ் விமான நிலையமாக இருப்பதால் சர்வதேச விமான நிலையமாக அறிவிக்க முடியாது. மேலும் தமிழகத்தில் ஏற்கெனவே மூன்று சர்வதேச விமான நிலையங்கள் உள்ளதாகவும் வடமாநிலங்கள் சிலவற்றில் ஒன்றுதான் இருப்பதாகவும் அமைச்சர் கூறினார் .
அதேபோல் BASA ஒப்பந்தத்தில் இணைப்பு மையமாக இந்தியாவின் எந்த விமான நிலையத்தையும் இணைக்க வாய்ப்பில்லை. ஏற்கெனவே ஏராளமான விமான நிலையங்களை இணைக்க முடியாது என தெரிவித்தார். மதுரையில் இருந்து இயக்கப்படும் இந்திய விமானங்களை அபுதாபி, மஸ்கட் , சிங்கப்பூர் ,கோலாலம்பூர், ஆகிய நகரங்களுக்கு இயக்குவதற்கான செயற்பாடுகளுக்கு முன்னுரிமை தருகிறோம் என்றார் மத்திய அமைச்சர் .
கடிதத்தில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மானிக் தஹூர், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் ,திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி ,தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் குமார், ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே .நவாஸ்கனி ,கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu