பருவமழை பாதிப்பு: தேசிய பேரிடர் மீட்புக் குழு மதுரை வருகை

பருவமழை பாதிப்பு:  தேசிய பேரிடர் மீட்புக் குழு மதுரை வருகை
X

மதுரையில் முகாமிட்டுள்ள பேரிடர் மீட்புக்குழுவினர்

தற்போது பெய்துவரும் வடகிழக்கு பருவமழை காரணமாக அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு குழு மதுரையில் முகாமிட்டுள்ளனர்

வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரக்கோணத்திலிருந்து மதுரைக்கு 2 தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் வந்து முகாமிட்டுள்ளனர்.44 பேர் கொண்ட இரு குழுக்கள் மதுரை ஆயுதப்படை மைதானத்திற்கு வந்தடைந்துள்ளது. தென் மாவட்டங்களில் மழை பாதிப்பு ஏற்பட்டால் உடனே விரைந்து செல்லும் வகையில் மதுரையில் முகாமிட்டுள்ளனர்.

Tags

Next Story
ai based agriculture in india