'தமிழகத்திற்கு எதிராக மோடி நடக்கவில்லை'- முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ
மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில் பாதுகாப்பு கருதியே குடியரசு தின விழாவில் தமிழக அலங்கார வாகன ஊர்தி அனுமதி இல்லைஎன சொல்கிறார்கள் . தமிழகத்தில் நடைபெறும் குடியரசு தின விழாவில் கூட அலங்கார வாகனங்கள் அணிவகுப்பு இல்லை.
தமிழக கலாசாரத்தை பிரதமர் பிரதிபலித்து வருகிறார் .வட மாநிலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் தமிழர் போல பிரதமர் நடந்துகொள்கிறார். தமிழகத்துக்கு எதிராக பிரதமர் நடந்துகொள்ளவில்லை. தமிழர்களின் வரலாற்றை மறைக்கும் வகையில் மத்திய அரசு நடந்து கொள்ளவில்லை .
தமிழர்களுக்கு எதிராக மத்திய அரசு எந்த ஒரு நிலைப்பாட்டையும் எடுக்காது என திட்டவட்டமாக கூறுகிறேன். இந்த அளவுக்கு எந்த ஒரு பிரதமரும் தமிழர்களின் கலாச்சாரம் பெருமையை உலகுக்கு சொன்னதில்லை.
பிரதமர் மோடி தமிழர்களின் பெருமையை உலக அரங்கில் நிலைநிறுத்தி வருகிறார். சிறுபான்மை வாக்கு சிதறிவிடும் என்பதற்காக முதல்வர் மு.க .ஸ்டாலின் ரகசியமாக பா.ஜ.க.வுடன் உறவு வைத்துள்ளார் .பிரதமர் மோடி தமிழகத்திற்கு ஒரே ஆண்டில் 11 மருத்துவ கல்லூரிகளை தந்துள்ளார்.அதற்கு காரணமாக இருந்தது அ.தி.மு.க. அரசு தான் என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu