மதுரையில் எலும்பு வங்கியை தொடக்கி வைத்த அமைச்சர்கள்
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தென் தமிழகத்தில் முதல் முறையாக எலும்பு வங்கி மற்றும் முதுகு தண்டுவட காயப்படுத்தும் சிகிச்சை மையத்தை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் மற்றும் பத்திர பதிவுத்துறை மூர்த்தி ஆகியோர்தொடக்கி வைத்தனர்
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அமைச்சர்கள் முதுகு தண்டுவட சிறப்பு சிகிச்சை மையம் புதிதாக துவக்கம் மற்றும் ஆய்வு பணிகளை மேற்கொண்டனர்.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தென் தமிழகத்தில் முதல் முறையாக எலும்பு வங்கி மற்றும் முதுகு தண்டுவட காயப்படுத்தும் சிகிச்சை மையத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் மற்றும் பத்திர பதிவுத்துறை மூர்த்தி ஆகியோர் தொடக்கி வைத்தனர். மேலும் அதிநவீன புற்றுநோய் கதிர்வீச்சு சிகிச்சை மையமும் தொடங்கி வைக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை பாலரங்காபுரம் மண்டல புற்றுநோய் மையத்தில் மேம்படுத்தப்பட்ட வெளிப்புற கோபால்ட்- 60 டிகிரி நவீன புற்றுநோய் கதிர்வீச்சு சிகிச்சை மையத்தை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர். மேலும், மருத்துவமனைகள் மாடியில் தோட்டம் அமைந்திருப்பதை பார்வையிட்டனர். இந்நிகழ்வில் சுகாதார செயலர் ஜெ. ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் அனீஸ்சேகர் ,சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன் ,மற்றும் மருத்துவர்கள் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
முன்னதாக சென்னையில் வந்த சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் மதுரை விமான நிலையத்தில் அளித்த பேட்டி: மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்புகளுக்கான மாணவர்கள் தரவரிசை பட்டியல் மதுரையில் வெளியிட இருக்கிறது. தமிழக முதல்வர் ஏற்கெனவே நிதிநிலை அறிக்கையில் குறிப்பிட்டிருந்த தமிழகம் முழுவதும் கர்ப்பிணி பெண்களுக்கு யோகா பயிற்சி வழங்கும் திட்டத்தினை மதுரையிலிருந்து தொடக்கி வைக்கப்படவுள்ளது.
குழந்தைகளுக்கான தடுப்பூசி போடப்படும் பணி விரைவில் தொடங்க மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. இந்தப்பணியை ஒன்றிய அரசு துவங்கினால் அதை தொடங்கும் முதல் மாநிலமாக தமிழகம் இருக்கும்.
புதிய தடுப்பு ஊசிகள் ஏதேனும் வரவழைக்கப்படும் திட்டம் எதுவும் இல்லை. ஏற்கெனவே ஒன்றிய அரசு வழங்கி வரும் covit shield,covaccine மற்றும் மட்டுமே போடப்படுகிறது. டெங்கு காய்ச்சல் பரவலைத்தடுக்க தமிழக முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி சுகாதாரத் துறையின் சார்பாக அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது .
யூடியூப் பார்த்து வீட்டிலேயே பிரசவம் செய்தது ஒரு தவறான அணுகுமுறை. சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது . மருத்துவத்துறையில் ஏற்படும் பாலியல் தொந்தரவு தொடர்பாக வந்த 12 புகார்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு தளர்வு கொடுத்த நிலையில் கோவில்களில் திருவிழாக்கள் தடைசெய்தது சரியானதே. தளர்வுகள் மூலம் சகஜ வாழ்க்கை திரும்பிக் கொண்டிருக்கிறது . இருந்தாலும் கூட ஓமைக்ரான் போன்ற நோய் அச்சுறுத்தலால் சுய கட்டுப்பாட்டை தொடர்வது என்பது அவசியம்.வரவிருக்கும் பண்டிகை காலங்களில் பொது இடங்களில் மக்கள் கூடுவதால் நோய் தொற்று ஏற்படும் அபாயத்தை கருத்தில் கொண்டு, விதிகளை கடைபிடிக்க வேண்டியது அதையும் மீறி முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கும் நடைமுறைகளை காவல்துறையும் உள்ளாட்சி நிர்வாகமும் சேர்ந்து செயல்படுத்திக் கொண்டிருக்கிறது .
ஏற்கனவே தீபாவளி பண்டிகையின் போது நானும் சுகாதாரத்துறை செயலரும் நேரடியாகவே கடைகளுக்கு சென்று நடவடிக்கை விதிகளை கடைபிடிப்பது குறித்து வலியுறுத்தியுள்ளோம்.நோய் தொற்றினால் தொடர்ந்து இருந்து வரும் சூழலில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிப்பது என்பது ஒவ்வொரு தனி மனிதனின் கடமையாகும். பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு தொற்று ஏற்படும் நிலையில் பள்ளி கல்லூரிகளில் கூடுதல் கட்டுப்பாடுகள் அமலாக்கப்படுவது தொடர்பாக பள்ளி கல்லூரி நிர்வாகங்கள் பின்பற்றி வருகின்றனர் . மேலும் கூடுதல் கவனத்தோடு பின்பற்ற வேண்டுமென்று அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
மதுரை எய்ம்ஸ் மாணவர் சேர்க்கை சம்பந்தமாக கலந்தாலோசிக்க இன்று அதிகாரிகள் வருகின்றனர் .முதலில் 50 மாணவர்கள் எந்த கல்லூரியில் சேர்ப்பது குறித்து இரண்டு அரசுகளும் கலந்து ஆலோசித்து வருகின்றன .இது குறித்து விரைவில் தமிழக முதல்வர் ஆலோசனை பெற்று முடிவு எடுக்கப்படும் என்றார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu