மதுரையில் காவலர் உயிரைப்பறித்த கட்டிடத்தை அமைச்சர் - மாவட்ட ஆட்சியர்- டிஜிபி ஆய்வு
மதுரை தெற்கு தொகுதிக்குட்பட்ட நெல் பேட்டை பகுதியில் பழமையான கட்டிடம் இடிந்து விழுந்து இரவு நேர ரோந்து பணியில் இருந்த காவலர் சரவணா உயிரிழந்தார்.மற்றொரு காவலர் கண்ணன் சிகிச்சையில் உள்ளார்.
இந்நிலையில் விபத்து நடந்த இடத்தை பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி ,மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் மற்றும் காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் இடிந்து விழுந்த கட்டிடங்களை பார்வையிட்டனர்.இந்நிலையில் மேலும் தமிழக முதல்வர் இறந்த காவலர் குடும்பத்திற்கு 25 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார் .
இந்நிலையில், காயமடைந்த விளக்குத்தூண் காவல் நிலைய தலைமை காவலர் கண்ணன் அவர்களை சிகிச்சை பெற்று வரும் நிலையில், அமைச்சர் மாவட்ட ஆட்சியர் ,மாநகர காவல் ஆணையர் உடல்நிலை குறித்து விசாரித்தனர் . மேலும் இடிந்து விழுந்த கட்டிடத்தில் ஓராண்டுக்கு முன்பே இடிக்க கோரி மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது .
கீழ வெளி வீதி பகுதியில் பழமையான கட்டிடம் இடிந்து விழுந்து சரவணன் உயிரிழந்துள்ளார். சிகிச்சை பெற்று வரும் நிலையில் கண்ணன் அளித்த புகாரின் அடிப்படையில், டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவின் பேரில், கட்டிட உரிமையாளர் மற்றும் வாடகைதாரர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .
இது குறித்து மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் கூறியதாவது: மதுரையில் கட்டிட விபத்து எதிரொலியாக கீழவெளி பகுதியில் உள்ள பழமையான கட்டிடங்கள் உள்ள வணிகம் நிறுவனம் செயல்பட தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. தீயணைப்பு துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகளின் கட்டிட உறுதி தன்மை குறித்து ஆய்வு மற்றும் சான்று பெற்றபின் வணிக நிறுவனங்கள் செயல்பட மீண்டும் அனுமதிக்கப்படும்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை சுற்றியுள்ள ஆவணி ,மாசி மற்றும் வெளிவீதி பகுதிகளில் 100 ஆண்டுகள் கடந்த பழமையான கட்டிடங்கள் குறித்து நடத்திய ஆய்வில் 100 கட்டிடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதில் உறுதி தன்மையற்ற கட்டிடங்கள் குறித்து மாநகராட்சி மற்றும் பொதுப்பணித்துறை தீயணைப்புத்துறை அதிகாரிகள் அடங்கிய குழு ஆய்விற்காக அமைக்கப்பட்டுள்ளது. கட்டிடங்கள் உறுதித் தன்மை குறைவாக இருந்தால் ஒரு வாரத்திற்குள் எடுத்து அதற்கான பணிகள் தொடங்கும் என்றார் ஆட்சியர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu