நாய் மீது கல்லை போட்டு கொலை முயற்சி செய்த மர்ம நபர்

நாய் மீது கல்லை போட்டு கொலை முயற்சி செய்த மர்ம நபர்
X

நாயை கல்லால் தாக்கும் மர்ம நபர்

மதுரை கரிமேடு பகுதியின் படுத்து கிடந்த நாய் மீது கல்லை போட்டு கொலை முயற்சி செய்த மர்ம நபர்

மதுரை கரிமேடு பகுதியில் சாலையில் படுத்து கிடந்த நாய் மீது கல்லை போட்டு கொலை முயற்சி செய்த மர்ம நபர் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது

மதுரை மாநகரில் கரிமேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தெருவில் படுத்து கிடந்த நாயின தலைமீது அந்த வழியாக வந்த மர்ம நபர் நாய் மீது கல்லை தூக்கி போட்டு கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார் .இச்சம்பவமானது அப்பகுதியில் சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது.

இந்நிலையில் அந்த சிசிடிவி காட்சி கரிமேடு பகுதியிலுள்ள சமூக வலைதளங்களில் வெளியாகி தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .மர்ம நபர் நாயை கொடூரமாக இரண்டு முறை கல்லால் தாக்கி விட்டு நடந்து செல்வது போன்ற காட்சி அதில் பதிவாகியுள்ளது .

கல்லால் தாக்கியபோது நாய் துடிதுடிக்கும் காட்சியும் பதிவாகி உள்ளது . அக்காட்சி பார்க்கும் மக்களிடையே பரிதவிப்பை ஏற்படுத்தும் வகையில் காட்சியானது அமைந்துள்ளது. இதனை கண்டு சமூக ஆர்வலர்களும் விலங்குகள் நல ஆர்வலர்களும அந்த சிசிடிவி காட்சியின அடிப்படையில் கரிமேடு காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளனர்.

புகாரின் அடிப்படையில் கரிமேடு போலீசாரும விலங்குகள் நல ஆர்வலர்களும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story