கால் சிலம்புடன் மனு தாக்கல் செய்ய வந்த மக்கள் நீதி மைய கட்சி வேட்பாளர்

கால் சிலம்புடன் மனு தாக்கல் செய்ய வந்த மக்கள் நீதி மைய கட்சி வேட்பாளர்
X

சிலம்புடன் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த மநீம வேட்பாளர் 

மதுரை ,மாநகராட்சி தேர்தலில், கால் சிலம்புடன் வந்து வேட்புமனு தாக்கல் செய்த மக்கள் நீதி மய்ய வேட்பாளர்

மதுரை மாநகராட்சி தேர்தலுக்கு அனைத்து அரசியல் கட்சியினரும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வேட்புமனு தாக்கல் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் . சுயேட்சை வேட்பாளர்களும் அதிகளவில் தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் மதுரை மாநகராட்சி 78 வது வார்டு மக்கள் நீதி மய்ய கட்சி சார்பில் போட்டியிடும் எம்பிஏ பட்டதாரி பெண் மதுமிதா கண்ணகி தோற்றத்தில் கையில் கால் சிலம்பு வந்து வேட்புமனு தாக்கல் செய்ய வந்தார் .

தொடர்ந்து மக்களை ஏமாற்றி வரும் வேட்பாளர்களை நம்பி மக்கள் வாக்களித்து வருவதை உணர்த்தும் வகையிலும், தொடர்ந்து மாற்றத்தை வேண்டியும் வரும் தேர்தலில் போட்டியிட உள்ளதாக வேட்பாளர் மதுமிதா தெரிவித்துள்ளார்.

Next Story