மதுரை பாண்டி கோவில் அருகே தூண்கள் உடைந்த நிலையில் கிடப்பதால் பரபரப்பு

மதுரை பாண்டி முனீஸ்வரர் கோவில்.
Madurai Pandi Temple-மதுரை மாவட்டம் கருப்பாயூரணி அருகே பிரசித்தி பெற்ற ஸ்ரீ பாண்டி முனீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் தமிழக மக்கள் மற்றும் தென் தமிழக மக்கள் ஸ்ரீபாண்டி முனீஸ்வரர் திருக்கோவிலில் சுப நிகழ்சிகள் நடத்தி கிடாய்கள் வெட்டி நேர்த்திக் கடனை தீர்த்து வருவது வழக்கம்.
இந்நிலையில் இக்கோவிலின் காலத்தால் அழியாத பல ஆண்டுகளுக்கு முன்பு செதுக்கப்பட்ட யாளி தூண்கள் உடைந்து மதுரையில் இருந்து சென்னை செல்லும் தேசிய நான்கு வழி சாலையில் ஓரம் கிடப்பதை கண்டு பக்தர்களும், பொதுமக்களும் அதிருப்தியில் உள்ளனர்.
மேலும் நெடுஞ்சாலை ஓரத்தில் மருந்து கழிவுகள், கட்டிட கழிவுகள், மற்றும் கோழி கழிவுகளை கொட்டி விடுகின்றனர் .
மேலும் சில மர்ம நபர்கள் குப்பைகளுக்கு தீ வைப்பதால் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளும் பெரும் அவதிக்குள்ளாகின்றனர்.
இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் அனுமதியின்றி குப்பைகளையும் எந்தவித கழிவுகளை கொட்ட கூடாது என மதுரை மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தப்பட்ட நிலையில்
திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில் குப்பை கழிவுகளை கொட்டும் மேலும் சில மர்ம நபர்கள் கோவில் தூண்களை சேதப்படுத்தி சாலையோரம் வீசி எறியப்பட்டு உள்ளது.
குறிப்பாக யாளி சிலை மற்றும் கடவுள் உருவங்கள் பொறிக்கப்பட்ட தூண்கள் இடிக்கப்பட்ட நிலையில் கிடப்பது பக்தர்கள் இடையேயும் சமூக ஆர்வலர் இடையேயும் பெரும் மன வருத்தத்தை அளித்துள்ளது .
இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து காலத்தில் அழியாத பழமையான தூண்களை சீரமைத்து இப்பகுதியை தூய்மையான பகுதியாக மாற்ற மதுரை மாவட்ட ஆட்சியருக்கு இப்பகுதி மக்கள் பக்தர்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu