மதுரை சித்திரை திருவிழா: ஆற்றில் மூழ்கி 3 பேர் பலி
X
பைல் படம்.
By - B.Gowri, Sub-Editor |5 May 2023 2:45 AM IST
கள்ளழகர் ஆற்றில் இறங்கும் காட்சியை காண பாலத்தின் மேல் நின்றும், ஆற்றுக்குள் நின்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
உலகப்புகழ்பெற்ற மதுரை சித்திரை திருவிழா மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த மாதம் 23-ந் தேதியும், அழகர் கோவில் கள்ளழகர் கோவிலில் கடந்த 1-ம் தேதியும் தொடங்கியது. விழாவின் ஒரு பகுதியாக நேற்று அதிகாலை 5.51 மணியளவில் கள்ளழகர் வைகை ஆற்றுக்குள் எழுந்தருளினார். அதனை பாலத்தின் மேல் நின்றும், ஆற்றுக்குள் நின்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இந்நிலையில், மதுரை சித்திரை திருவிழாவுக்கு வந்திருந்த 17 வயது சிறுவன் உள்பட 3 பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu