மதுரை பியூட்டி பார்லர் ஹோல்சேல் கடையில் கதவை உடைத்து பல லட்சம் திருட்டு

மதுரை பியூட்டி பார்லர் ஹோல்சேல் கடையில்  கதவை உடைத்து பல லட்சம் திருட்டு
X
மதுரை கீழஆவணி மூலவீதியில் உள்ள அழகுசாதன மொத்த விற்பனை கடையில் ரூ 8 லட்சம் திருடுபோன சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை

மதுரை கீழ ஆவணி மூல வீதி குன்னத்தூர் சத்திரம் அடுத்துள்ள கட்டடத்தின் மாடியில் அழகுசாதன பொருட்கள் மொத்த கடை வைத்திருப்பவர் அனில்குமார் நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டி விட்டு சென்றுள்ளார்.

நேற்று காலை வந்து பார்த்தபோது கதவு உடைக்கப்பட்டு கொள்ளை போனது தெரியவந்தது.இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அனில்குமார், விளக்குத்தூண் காவல் நிலையத்தில் அளித்த .புகாரின் அடிப்படையில், போலீசார் கைரேகை நிபுணர், மோப்ப நாய் வரவழைத்து சோதனை மேற்கொண்டபோது கடை வசூல் தொகை ரூ 8 லட்சம் திருடு போனது தெரியவந்தது .

மேலும் போலீசார் அப்பகுதி கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.மேலும் அனில் குமாருக்கு தெரிந்த நபர்கள் அல்லது மர்மநபர்கள் கொள்ளையடித்துச்சென்றிருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Tags

Next Story
ai devices in healthcare