மதுரை அதிமுக அமைப்பு தேர்தல்: செல்லூர் ராஜூவுக்கு வலுக்கும் எதிர்ப்பு

மதுரை அதிமுக  அமைப்பு தேர்தல்:  செல்லூர் ராஜூவுக்கு வலுக்கும் எதிர்ப்பு
X

செல்லூர் ராஜு

அதிமுக அமைப்பு தேர்தலில் கட்சிக்காரர்களிடம் செல்லூர் ராஜூவின் மருமகன் கணேஷ்பிரபு மனு பெற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்த அதிமுகவினர்

அ.தி.மு.க.,வில் உள்கட்சி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் நகர் செயலாளர் பதவிக்கு போட்டியிட விருப்பமனு பெறப்பட்டது. தற்போதைய செயலாளரான செல்லூர் ராஜூ, சட்டசபை கூட்டத்தொடரில் இருந்ததால் கட்சிக்காரர்களிடம் அவரது மருமகன் தகவல் தொழில்நுட்பப்பிரிவு இணைசெயலாளர் கணேஷ்பிரபு விருப்பமனு பெற்றதாக புகார் எழுந்தது.

ராஜூவுக்கு எதிராக நகர் செயலாளர் பதவிக்கு முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் ராஜாங்கம், எஸ்.எஸ்.சரவணன், முன்னாள் மண்டல செயலாளர் சாலைமுத்து, ஜெ., பேரவை முன்னாள் செயலாளர் மாரிச்சாமி ஆகியோர் மனு அளித்தனர். கணேஷ் பிரபு மனு பெற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்த அவர்களை, தேர்தல் பொறுப்பாளர்களான முன்னாள் அமைச்சர் வளர்மதி, சென்னை புறநகர் மாவட்ட செயலாளர் கந்தன் சமரசம் செய்தனர்.

ராஜாங்கம் கூறியதாவது: இதற்கு முன்பு நடந்த உள்கட்சி தேர்தலை திருமண மண்டபத்தில் நடத்திய செல்லூர் ராஜூ, நகர் செயலாளர் பதவிக்கான தேர்தலை தன் அலுவலகத்தில் நடத்தியுள்ளார். கட்சி அலுவலகத்திற்கான இடம் சமயநல்லூரில் உள்ளது. அங்கு விருப்பமனு பெற்றிருக்கலாம் அல்லது திருமண மண்டபத்தில் நடத்தி இருக்கலாம். அவருக்கு பதில் அவரது மருமகனை மனு பெறச்செய்தது ஏற்புடையது அல்ல. இதுகுறித்து கட்சி தலைமையிடம் புகார் தெரிவித்துள்ளோம்.

அடுத்த நகர் செயலாளர் யார் என தலைமை முடிவு செய்யும் என்றார்.

செல்லூர் ராஜூ கூறியதாவது: நான் சட்டசபைக்கு சென்றதால் எனக்கு பதில் மருமகன் மனு தாக்கல் செய்தார். கட்சிக்காரர்களிடம் அவர் விருப்பமனு பெறவில்லை. வளர்மதி உள்ளிட்டோர் தான் பெற்றனர். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம் என்பதால் மற்றவர்களும் போட்டியிட விருப்ப மனு கொடுத்துள்ளனர். அதில் தவறு இல்லை. சமயநல்லூரில் உள்ள கட்சி இடம் மீது வழக்கு நடப்பதால் என் அலுவலகம் தான் தற்போதைய கட்சி அலுவலகமாக உள்ளது என்றார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!