உள்ளாட்சித் தேர்தல்: மதுரை மாவட்டத்தில் 7760 வாக்குபதிவு அலுவலர்கள் நியமனம்
மதுரை மாவட்டத்திற்கான தேர்தல் ஆணை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று தேர்தல் குழு பார்வையாளர் ஏ.கே. கமல் கிஷோர் முன்னிலையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் மற்றும் மதுரை மாவட்ட கண்காணிப்பாளர் வீ. பாஸ்கரன் மற்றும் மதுரை மாவட்ட காவல்துறை ஆணையாளர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
இதில், மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் பேசியதாவது: தேர்தல் வாக்குப் பதிவின்போது 7760 வாக்குப்பதிவு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் நன்னடத்தை விதிகளை கண்காணிக்க 12 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் கட்டுப்பாட்டு அறை இயங்கக் கூடியவை 18 004257861என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் புகார்கள் தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாக்கு பதிவிற்காக வாக்குச்சாவடிகளுக்கு தளவாட பொருட்களை எடுத்துச் செல்ல 127 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu