மதுரை அருகே சட்டவிரோதமாக மதுபாட்டில் விற்றவர் கைது

மதுரை அருகே சட்டவிரோதமாக மதுபாட்டில் விற்றவர் கைது
X
மதுரை மாவட்டத்தில் சட்ட விரோதமாக மதுபாட்டில் விற்றவர் கைது செய்யப்பட்டார்.

மதுரை மாவட்டத்தில் சட்ட விரோதமாக மதுபாட்டில் பதுக்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு காவல் நிலையத்திலும் இதுபோன்ற செயல்களை கட்டுப்படுத்த காவல் அதிகாரிகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ. பாஸ்கரன் உத்தரவிட்டார்.

மேலும் மாவட்ட தனிப்படை மற்றும் உட்கோட்ட தனிப்படையினர் இருக்கும் மது பாட்டில்கள் சட்டவிரோதமாக கடத்தி வரும் மீது கடும் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினர்.அதன் அடிப்படையில் மாவட்ட தனிப்படையினர் நடத்திய அதிரடி சோதனையில் ஒத்தக்கடை காவல் நிலையத்திற்கு உட்பட்ட 500 வீடு காலனி, இடையபட்டியை சேர்ந்த கவிதா என்பவரது வீட்டில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து இருப்பதாக தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில் சோதனை செய்ததில் 192 பாட்டில்கள் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த மதுபாட்டில்கள் கைப்பற்றப்பட்டன. பதுக்கியவர் கைது செய்யப்பட்டார். சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்தால் , அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ. பாஸ்கரன் எச்சரித்துள்ளார்.

Tags

Next Story
ai marketing future