லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் போல நடித்து நகை பறித்தவர்கள் கைது

லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் போல  நடித்து நகை பறித்தவர்கள் கைது
X
மதுரையில், லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி போல நடித்து தங்க மோதிரத்தை பறித்தவர்கள் கைது செய்யப்பட்டனர்.

மதுரை பழங்காநத்தம் கோவலன் நகர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் தொழிலதிபராக உள்ளார். மேலவெளி வீதியில் தனியார் தங்கும் விடுதியில், நண்பர்களை சந்திக்க சென்றுள்ளார். அங்கு சொகுசு காரில் வந்த 2 மர்ம நபர்கள், வெங்கடேசனிடம் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் எனக்கூறி, அவர் வைத்திருந்த பையை சோதனையிட்டனர். பணம் இல்லாததால் கையில் அணிந்திருந்த அரை சவரன் தங்க மோதிரத்தை பறிமுதல் செய்வதாக கூறி வாங்கி சென்றனர்.

இச்சம்பவம் குறித்து மர்ம நபர்கள் மீது சந்தேகம் அடைந்து, வெங்கடேசன் மதுரை திடீர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர். விசாரணையில், அவர்கள் கோயம்புத்தூரை சேர்ந்த அஜய் மற்றும் திண்டுக்கல்லை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பது தெரியவந்தது. சம்பவத்தின் அடிப்படையில், போலீசார் இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!