மதுரையில் கார் கண்ணாடியை உடைத்து நகை மற்றும் லேப்டாப் திருட்டு

மதுரையில் கார் கண்ணாடியை உடைத்து நகை மற்றும் லேப்டாப் திருட்டு
X

மதுரையில் கார் கண்ணாடியை உடைத்து மர்ம நபர்கள் நகை மற்றும் லேப்டாப் 

மதுரை தல்லாகுளம் பகுதியில் பூங்கா வாசலில் நிறுத்தியிருந்த கார் கண்ணாடியை உடைத்து நகை, லேப்டாப் திருடு போனது

மதுரை தல்லாகுளம் பகுதியில் பூங்கா வாசலில் நிறுத்தியிருந்த கார் கண்ணாடியை உடைத்து மர்ம நபர்கள் நகை மற்றும் லேப்டாப் திருடி சென்றனர் இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை.

கோயம்புத்தூரை சேர்ந்த பாலகுமாரன் என்பவர் மதுரை தல்லாகுளம் பகுதியில் உறவினரை பார்க்க வந்தார். அந்த பகுதியில் உள்ள குழந்தைகள் பூங்கா அருகே தன்னுடைய காரை நிறுத்திவிட்டு உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு திரும்பி வந்தார் அப்போது காரின் கண்ணாடி உடைக்கப்பட்டு காரிலிருந்து லேப்டாப், ஹார்ட் டிஸ்க் மற்றும் 9 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த பாலகுமாரன், அருகிலுள்ள தல்லாகுளம் காவல்நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து , திருடிய மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!