ஓடும் பேருந்தில் பெண்ணிடம் நகை திருட்டு: போலீஸார் விசாரணை

ஓடும் பேருந்தில் பெண்ணிடம் நகை திருட்டு: போலீஸார் விசாரணை
X
மதுரையில் ஓடும் பேருந்தில் பெண்ணின் கைப்பையில் வைத்திருந்த நகை திருடு போனது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை

மதுரையில் ஓடும் பெண்ணின் கைப்பையில் இருந்த ஆறு பவுன் நகை திருடப்பட்டசம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். .

மதுரை அருகே சிலைமான் பகுதியை சேர்ந்த கார்த்திகைக்கண்ணனின் மனைவி தில்லைராணி (23 ).இவர் பேருந்தில் மதுரைக்கு சென்று கொண்டிருந்தார்.அப்போது திருமலை நாயக்கர் மஹால் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி பார்த்தபோது கைப்பையில் வைத்திருந்த 6 பவுன் நகையை காணவில்லை.இதனால் அதிர்ச்சியடைந்த தில்லை ராணி அப்பகுதியிலுள்ள தெற்குவாசல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!