மதுரையில் மல்லிகை பூ விலை கடும் உயர்வு

மதுரையில் மல்லிகை பூ விலை கடும் உயர்வு
X
மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் மல்லிகைப் பூ விலை ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.600 உயர்ந்தது.

மதுரை மாட்டுத்தாவணி மலா் சந்தைக்கு மதுரை, தேனி மாவட்டங்களிலிருந்து மல்லிகை, முல்லை, பிச்சி, செவ்வந்தி, மரிக்கொழுந்து உள்ளிட்ட மலா்கள் வருகின்றன. கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூா் பகுதியிலிருந்து ரோஜா உள்ளிட்ட மலா்கள் கொண்டு வரப்படுகின்றன.

இங்கு விவசாயிகளிடம் மலா்களை கொள்முதல் செய்யும் வணிகா்கள் மொத்த வியாபாரம் செய்கின்றனா். சந்தையின் வெளிப் பகுதியில் சில்லறை வியாபாரமும் நடைபெறுகிறது. இச்சந்தையில் இருந்து விருதுநகா், சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்ட விற்பனையாளா்களுக்கு பூக்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன.

கடந்த சில நாள்களாக மழை பெய்ததால், பூக்களின் வரத்து குறைவாகவே இருந்தது. கடந்த சில நாட்களாகவே மல்லிகைப்பூ விலை அதிகரித்தது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை வரை மல்லிகைப்பூ கிலோ ரூ.500 ஆக விற்பனையான நிலையில், இன்று சந்தையில் கிலோ ரூ.1,100 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil