மதுரை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வட்டியில்லா கடன்: ஆட்சியர் அறிவிப்பு
மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர்.
மதுரை மாவட்டத்தில் தேசிய ஊனமுற்றோர் நிதி மற்றும் வளர்ச்சிக் கழகம் மூலம் மாற்றுத் திறனாளிகள் சுய தொழில் செய்ய மத்திய கூட்டுறவு நகர கூட்டுறவு வங்கி, நகர கூட்டுறவு வங்கி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலம் வட்டியில்லா கடனுதவி வழங்கப்படுகிறது என மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் அறிவித்துள்ளார்.
மதுரை மாவட்ட ஆட்சியர் கூறியதாவது சிறு வியாபாரம், விற்பனை உற்பத்தி, கட்டுமானம், விவசாய கருவிகள், விவசாய விளையாட்டுப் பொருட்கள், விற்பனை செய்தல் உள்ளிட்ட தொழில் செய்ய கூட்டுறவு வங்கி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலம் ரூ 15 லட்சம் வரை கடன் பெறலாம்.
மாற்றுத்திறனாளிகள் ரூ 25 ஆயிரம் பிணைத் தொகை, ரூ.50000 வரை இரண்டு பிணைய உத்தரவாதத்துடன் விண்ணப்பங்கள் விண்ணப்பிக்கலாம். கூட்டுறவு வங்கி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் விண்ணப்பங்களை விண்ணப்பிக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு மதுரை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல சங்க அலுவலகத்தை நேரில் அணுக விவரங்களை அறிந்து கொள்ளலாம் என அறிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu