மதுரை ஆதீனத்திற்கு கொலை மிரட்டல் எதிரொலி: பலத்த போலீஸ் பாதுகாப்பு
மதுரை ஆதீனம் சோமசுந்தர தேசிகர்
மதுரை ஆதீனத்துக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் ஆதீனத்துக்கும், ஆதீன மடத்துக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்கக்கோரி, மாநகரக் காவல் ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டதைத் தொடா்ந்து ஆதீன மடத்துக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் தருமபுரம் ஆதீனத்தில் நடைபெறும் பட்டணப்பிரவேசம் நிகழ்ச்சிக்கு அரசு தடை விதித்தது தொடா்பாக மதுரை ஆதீனம் பேட்டி அளித்திருந்தாா். இதைத் தொடா்ந்து தனது உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக மதுரை ஆதீனம் புதன்கிழமை தெரிவித்திருந்தாா்.
இந்நிலையில் மதுரை ஆதீனம் மற்றும் ஆதீன மடத்துக்கு ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்பு வழங்கக்கோரி இந்து மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவா் எம்.சோலைகண்ணன், வழக்குரைஞா்கள் முத்துக்குமாா், ராஜேந்திரன், நீலமேகம், கௌரிசங்கா், அமிழ்தன் உள்ளிட்டோா் மதுரை மாநகரக் காவல் ஆணையா் டி.செந்தில்குமாரை நேரில் சந்தித்து மனு அளித்தனா்.
மனுவைப் பெற்றுக் கொண்ட காவல் ஆணையா், உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தாா். இதனை தொடா்ந்து மதுரை தெற்காவணி மூலவீதியில் உள்ள ஆதீன மடத்தில், சாா்பு- ஆய்வாளா் தலைமையில் 2 காவலா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
மேலும் காவல்துறை அனுமதி பெற்று ஊழியர்கள் கோவில் சம்பந்தப்பட்ட நிகழ்வுகள் அனைத்தும் நடைபெறும். வெளிநபர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu