மதுரையில் முதன்முறையாக எட்வர்டு டெலிவரி சிஸ்டம் மூலம் இருதய வால்வு சிகிச்சை.
செய்தியாளர்களிடம் பேசிய மதுரை ஜோசப் மருத்துவமனையில் இருதய அறிவியல் இயக்குனர் மற்றும் மூத்த இருதய சிகிச்சை நிபுணர் டாக்டர் மாதவன்
மதுரையில் உள்ள ஹான் ஜோசப் தனியார் மருத்துவமனையில் தமிழகத்திலேயே முதல் முறையாக எட்வர்ட் டெலிவரி சிஸ்டம் மூலம் ஷாப்பியன் 3டிரான்ஸ் இருதய வால்வு சிகிச்சை நடைபெற்றுள்ளது.
கடந்த ஒரு வருட காலமாக சுவாசப் பிரச்னையால் அவதிப்பட்டு வந்த இலங்கையை சேர்ந்த செல்வராணி வயது 82 முதியவர் இந்த பெண்மணிக்கு இருதயத் கோளாறுகளால் பாதிக்கப்பட்டு உள்ளார். மேலும் இவருக்கு ஹைபர்டென்ஷன் தைராய்டு கட்டி போன்ற இணை நோய்களும் இருந்தது.நோயாளி வயதானவராக இருந்தாலும் அவருக்கு நோய்கள் இருந்ததால் ஓபன் ஹார்ட் சர்ஜரி செய்ய முடியாத சூழல் இருந்தது.
எனவே சுயநினைவுடன் இருக்கும் நிலையிலேயே ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே ஆஞ்சியோகிராபி முறையில் 3 எட்வர்ட்ஸ் காத்திடர் ஆர்டிக் வால்வு இம்பிளாண்டேஷன் செய்யப்பட்டது .இதன் மூலம் பல மணி நேரம் செய்யப்படவேண்டிய அறுவைசிகிச்சை வெறும் ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே பெரிதளவு பாதிப்பின்றி இந்த சிகிச்ச செய்து முடிக்கப்பட்டுள்ளது.சிகிச்சை முடிந்த ஒரே நாளில் அந்த நோயாளி சகஜ நிலைக்கு திரும்பி உள்ளார்.
இதுகுறித்து ஜோசப் மருத்துவமனையில் இருதய அறிவியல் இயக்குனர் மற்றும் மூத்த இருதய சிகிச்சை நிபுணர் டாக்டர் மாதவன் கூறுகையில் .இருதயம் சிக்கலான வால்வுகளை உடைய குழாய் போன்றதாகும். எனவே வயோதிகத்தால் ஏற்படும் கோளாறுகள் ஏற்பட வழிவகுக்கும். இருதய வாழ்வின் இந்த பகுதியில் இருந்துதான் உடலில் பல்வேறு பகுதிகளுக்கு ரத்தம் செல்லும் இந்த வாழ்வு குழுவினால் பொதுவாக ஓபன் ஹார்ட் சர்ஜரி பரிந்துரைக்கப்பட்டது.
அதே சமயம் எல்லா வயதினருக்கும் மயக்க மருந்து கொடுத்து இந்த சிகிச்சை செய்ய முடியாது.நோயாளியின் நலன் கருத்தில் கொண்டு நோயாளியின் முன் தொடைப்பகுதியில் ஓபன் சர்ஜரி இல்லாமல் சாவித்துவாரம் வழியாக டிரான்ஸ்பர் மூலம் சிகிச்சையில் வாழ்வு மாற்றம் வெற்றிகரமாக செய்யப்பட்டது.
இந்த முறை உலக அளவில் டிரான்ஸ்காத்திடர் வாழ்வு இம்பிளா டேன்சன் என்ற முன்பு ஓபன் ஹார்ட் சர்ஜரி சிகிச்சைக்கு அதிக கட்டணம் இருந்து நாளடைவில் குறைந்து. இந்த சிகிச்ச கட்டணம் குறைய வாய்ப்பு உள்ளது.இந்த சிகிச்சை முறையில் இருதய வால்வு மாற்றப்பட்டு நோயாளி இரண்டு நாளில் சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பலாம்.
எனவே நோயாளிகளுக்கு இணை நோய்கள் இருந்தாலும் இந்த சிகிச்சை முறையை மூலம் நலம் அடைய லாம்.இந்த சிகிச்சையை தற்போதைக்கு விலை உயர்ந்ததாக இருந்தாலும் இனி வரும் காலங்களில் தேவை ஏற்படும் பட்சத்தில் இதற்கான விலை கண்டிப்பாக குறையும்.அதனால் பெரும்பாலான மக்கள் பயனடைவார்கள் என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu