மதுரையில் போலீஸ் என கூறி மூதாட்டியிடம் நூதன முறையில் நகை திருடியவர் கைது
மதுரை வில்லாபுரம் பகுதியில் சாலையில் தனியாக நடந்து சென்று கொண்டிருந்த 52 வயது பெண்ணிடம் தான் ஒரு போலீஸ் என கூறி தனியாக வெளியில் நடந்து செல்பவர்கள் நகைகளை அணிந்து வரக்கூடாது என்று அறிவுரை கூறி நகைகளை பத்திரமாக கழற்றி தங்களிடம் கொடுக்க சொல்லியுள்ளான்.
அதை நம்பி மூதாட்டி மற்றும் பெண்கள் ஏமாந்து போலி போலீசிடம் கொடுத்துள்ளார் .மேலும் இதனை தொடர்ந்து ஒரு பேப்பரில் வைத்து அந்த நகைகளை கொடுத்து பைக்குள் வைக்கச் சொல்லிவிட்டு நகையை நூதன முறையில் திருடிச் செல்ல முயன்றுள்ளான்.
இதனை சுதாரித்துக் கொண்ட அந்த பெண் பேப்பரை திறந்து பார்த்தபோது கற்கள் இருந்தது தெரியவந்துள்ளது. உடனடியாக அந்தப் பெண் கூச்சலிட அவ்வழியாக பணிக்குச் சென்ற தனிப்படை சார்பு ஆய்வாளர் வாகனத்தை நிறுத்தி அந்தப் பெண்ணிடம் விசாரணை செய்துள்ளார்.
இதில் அவன் போலி போலீஸ் என்பது தெரியவந்தது. இதனை அறிந்த உதவி ஆய்வாளர் அவனை பிடிக்க முற்பட்டுள்ளார் .அதில் ஒருவன் இரு சக்கர வாகனத்தில் தப்பி ஓடி விட மற்றொருவனை கையும் களவுமாக துரத்திப் பிடித்து உள்ளார்.
பொதுமக்கள் உதவியுடன் அவனை நடு சாலையில் கட்டி வைத்துள்ளார் உண்மையான போலீஸ். மேலும் இப்பகுதிக்குட்பட்ட அவனியாபுரம் காவல் நிலைய போலீசாரை வரவழைத்து போலீஸ் பாணியில் காவல் நிலையத்தில் வைத்து விசாரித்தபோது போலி போலீஸ் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த முகமது அலி என்பது தெரியவந்தது.
அவனுடன் வந்த மற்றொருவனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். போலீஸ் என்று பொதுமக்களிடையே நாடகம் நடித்த கர்நாடகா மாநில திருடன் உண்மையான போலீசாரிடம் மாட்டிக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இச்சம்பவம் குறித்து மதுரை மாவட்ட கண்காணிப்பாளர் பாஸ்கரன் போலீஸ் என்று சாலையில் தனியாக நடந்து செல்லும் அப்பாவிப் பெண்களிடம் நூதன முறையில் நகைகளை திருட இதுபோன்ற நபர்கள் கும்பலாக மதுரையில் செயல்பட்டு வருகின்றனர் .
இத்தகைய சூழ்நிலையில் முதலில் காவலர் என்று கூறி இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை பற்றி உடனடியாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.
மேலும் பெண்கள் யாரும் காவலர் என்று கூறி நகைகளை கேட்பவர்களிடம் கொடுக்க வேண்டாம் என்று அறிவுறுத்தி உள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu