மதுரையில் அமையவுள்ள கலைஞர் நூலகத்திற்கு தமிழக அரசு நிதி ஒதுக்கீடு

மதுரையில் அமையவுள்ள  கலைஞர் நூலகத்திற்கு தமிழக அரசு நிதி ஒதுக்கீடு
X

மதுரையில் அமையவுள்ள கலைஞர் நூலகத்தின் மாதிரி படம்

மதுரையில் சர்வதேசத் தரத்தில் அமையவுள்ள கலைஞர் நூலகத்திற்கு 114 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது

மதுரையில் சர்வதேச தரத்தில் அமையும் கலைஞர் நூலகத்திற்கு ரூ. 114 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. நூலகம் அமைக்க ரூ 99 கோடியும், நூல்கள் வாங்க ரூ 10 கோடி ,தொழில்நுட்ப சாதனங்கள் வாங்க ரூ 5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நூலகம் 7 தளங்களுடன் முற்றிலும் குளிரூட்டப்பட்ட வசதியுடன் அமைக்கப்பட உள்ளது. இந்த நூலகம் பொதுமக்கள் பயனடையும் வகையில் அமைய உள்ளதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
ராசிபுரம் அருகே இரு சமூகத்தினர் மோதல்- போலீசார் குவிப்பு..!