மதுரை திருப்பாலை அருகே 13 வயது சிறுமி தற்கொலை

மதுரை திருப்பாலை  அருகே 13 வயது சிறுமி தற்கொலை
X
மதுரை திருப்பாலை அருகே 13 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மதுரை திருப்பாலை காவல் சரகத்திற்கு உட்பட்ட சூரியநகரி பகுதியை சேர்ந்த ஒருவரின் 13, வயது மகள் நேற்று மாலை தனது வீட்டின் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவர் தற்போது ஒன்பதாவது படித்து வந்துள்ளார். இவரது இறப்புக்கான காரணம் என்ன என்பது குறித்து, போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

சில வருடங்களுக்கு முன்பு, இவரது தாயார் தற்கொலை செய்து கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. திருப்பாலை போலீசார் சிறுமியின் உடலை மீட்டு, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்கு உட்படுத்தி, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்