காந்தி ஜெயந்தி: மதுரையில் மரியாதை செய்யும் முதலமைச்சர் ஸ்டாலின்

காந்தி ஜெயந்தி: மதுரையில் மரியாதை செய்யும்  முதலமைச்சர் ஸ்டாலின்
X

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (பைல் படம்)

காந்தி ஜெயந்தி அன்று மதுரை அருங்காட்சியகத்தில் காந்தி சிலைக்கு மரியாதை செய்யும் முதலமைச்சர் என்ற பெருமையை பெறுகிறார்

மதுரையில் காந்தி ஜெயந்தி விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்பு

தென் இந்தியாவில் உள்ள ஒரே காந்தி அருங்காட்சியகமான மதுரை காந்தி அருங்காட்சியகத்திற்கு இதுவரை முன்னாள் முதலமைச்சர்கள் காமராஜர், கருணாநிதி, எம்.ஜி.ஆர் ஆகியோர் வருகை புரிந்துள்ளனர்.அந்த வரிசையில் நான்காவது முதலமைச்சராக ஸ்டாலின் வருகை தருகிறார். குறிப்பாக, காந்தி ஜெயந்தி அன்று மதுரை அருங்காட்சியகத்தில் காந்தி சிலைக்கு மரியாதை செய்யும் முதல் முதலமைச்சர் என்ற பெருமையை பெறுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின். காந்தி அரையாடை புரட்சி செய்த மேலமாசி வீட்டிற்கு வருகை தரும் முதல் முதலமைச்சரும் ஸ்டாலின் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
பவானி வர்த்தக மையத்தில் புதிய பாக்கு சீசன் தொடக்கம்