மதுரை மாநகர அதிமுக அமைப்பு தேர்தல்: செல்லூர் ராஜூ எதிர்த்து 4 பேர் மனு

மதுரை மாநகர அதிமுக அமைப்பு தேர்தல்:  செல்லூர் ராஜூ எதிர்த்து 4 பேர் மனு
X

அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர்ராஜு

மதுரை மாநகரின் அதிமுக அமைப்பு தேர்தலில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவை எதிர்த்து 4 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர்

மதுரை மாநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகளுக்கான கழக அமைப்பு தேர்தலின் வேட்பு மனு தாக்கல் கோரிப்பாளையம் அருகேயுள்ள மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

தேர்தல் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்ட மகளிர் அணி செயலாளர்/முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.கந்தன், அம்மா பேரவை செயலாளர் பெரும்பாக்கம் ராஜேந்திரன் ஆகியோர் நிர்வாகிகள் அளித்த வேட்பு மனுக்களை பெற்றுக் கொண்டனர்.

இதில், மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் பதவிக்கு தற்போதைய மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜூ வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். அவரை எதிர்த்து, அம்மா பேரவை செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.சரவணன், முன்னாள் மாவட்ட செயலாளர் ராஜாங்கம், முன்னாள் மண்டல தலைவர் சாலை முத்து, முன்னாள் அம்மா பேரவை செயலாளர் மாரிச்சாமி ஆகிய நான்கு பேரும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

செல்லூர் ராஜு வின் செயல்பாடுகளில் திருப்தி இல்லை என்றும், அவருடைய நடவடிக்கைகளால் அதிருப்திக்கு உள்ளான கட்சியினர் பலரும் மாற்று கட்சிகளுக்கு சென்று விட்டதாகவும், அதனால் கடந்த சட்டமன்றத் தேர்தலில் மாநகர் பகுதியில் அதிமுக வீழ்ச்சியை சந்தித்ததாகவும், மதுரை மாநகர் அதிமுகவில் மாற்றம் வேண்டும் என்ற நோக்கிலேயே செல்லூர் ராஜூவை எதிர்த்து வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக அதிமுக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!