துப்புரவு பணியாளர் குறித்த இன்ஸ்டாநியூஸ் செய்தி எதிரொலி: அமைச்சரின் உதவியாளர் விளக்கம்

துப்புரவு பணியாளர் குறித்த இன்ஸ்டாநியூஸ் செய்தி எதிரொலி: அமைச்சரின் உதவியாளர் விளக்கம்
X

பாதாள சாக்கடை சுத்தம் செய்யும் பணி

அமைச்சர் தொகுதியில் மனிதக் கழிவுகளை கைகளால் அள்ளும் அவலம் என்ற செய்திக்கு அமைச்சரின் உதவியாளர் விளக்கம் அளித்துள்ளார்

தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தொகுதியில் மனிதக் கழிவுகளை கைகளால் அள்ளும் அவலம் என்ற செய்தியை நமது இன்ஸ்டாநியூஸ் செய்தி தளத்தில் நேற்று பதிவிட்டிருந்தோம். இந்த செய்தியை பார்த்து விட்டு அமைச்சரின் உதவியாளர் நம்மை தொலைபேசியில் அழைத்து பல்வேறு விளக்கங்களை அளித்தார்.

அமைச்சரின் உதவியாளர் கூறியதாவது: மாநகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், பிளாஸ்டிக் கையுறையை அணிந்து கொண்டு அவர்களால் எளிதாக வேலை பார்க்க முடியவில்லை என்பதால், அவர்கள் கையுறையை அணிவதில்லை. அமைச்சரோ மேயரோ ஆய்வு செய்ய வரும்போது மட்டுமே அதனை அணிகிறார்கள். இதனை பலமுறை கூறியும், துப்புரவு தொழிலாளர்கள் கையுறை அணிய மறுக்கிறார்கள்.

மேலும் வசந்த நகர் இரண்டாவது தெருவில் உள்ள பரோட்டாக்கடையில் மீதமாகும் மைதா மாவு மற்றும் சால்னாவை அவர்கள் சாக்கடையில் கொட்டி விடுவதால், அது பாதாள சாக்கடையில் சேர்ந்து, கட்டியாகி விடுவதால் அடைப்பு ஏற்பட்டு பாதாள சாக்கடை நீரானது சாலையில் வழிந்து ஓடுகிறது.

சாக்கடை அடைப்பில் இருந்து வெளியாகும் மைதா மாவு

இது குறித்து அந்த கடைக்காரர்களிடம் கூறப்பட்டுள்ளது. இது மீண்டும் தொடர்ந்தால், நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், அமைச்சரின் தொகுதியில் என்ன குறைகள் இருந்தாலும், பொதுமக்கள் அதனை தெரிவித்தவுடன் அவை உடனடியாக சரி செய்யப்படுவதாக தெரிவித்தார்

பத்திரிக்கையாளர்களின் முக்கியமான பணி பொதுமக்கள் அனுபவிக்கும் பிரச்சினைகளை சுட்டிக் காட்டுவதுதான். நாம் சுட்டிக்காட்டிய குறைகளை நேர்மறையான விமர்சனமாக எடுத்துக் கொண்டு, உடனடியாக நம்மை தொடர்பு கொண்டு விளக்கம் அளித்த அமைச்சரின் உதவியாளருக்கு இன்ஸ்டாநியூஸ் சார்பில் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

Tags

Next Story
வங்கி தேர்வில் முதலிடம் ராசிபுரம் மாணவனுக்கு வாழ்த்துகள் மலர்ந்த வரவேற்பு..!