வைகையில் மூன்றாம் கட்ட வெள்ளம் எச்சரிக்கை விடப்பட்டது
வைகை அணை
தற்பொழுது பெய்து வரும் தென்மேற்கு வடகிழக்கு பருவ மழையால் வைகை அணைக்கு பெரியாறு, போடி கொட்டக்குடி ஆறு, தேனி முல்லை ஆறு, வருஷநாடு வைகை ஆறு மூலம் நீர் வரத்து அதிகரித்துள்ளது. சில நாட்களாக வைகை அணை நீர்பிடிப்பு பகுதிகளில் மழை தொடர்வதால் அணைக்கான நீர்வரத்து கணிசமாக உள்ளது.
அணையின் மொத்த உயரம் 71 அடியில் இம்மாத தொடக்கத்தில் 62 அடியாக இருந்த நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து நேற்று காலை 9 மணிக்கு 65 அடியை எட்டியது. இதனால் அணையில் இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. நேற்று இரவு நீர்மட்டம் 69 அடியை எட்டியதை தொடர்ந்து மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2789 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து மதுரை, சிவகங்கை மாவட்ட பாசனத்திற்கு கால்வாய் வழியாக வினாடிக்கு 500 கனஅடி தேனி மதுரை மாவட்ட குடிநீருக்கு வினாடிக்கு 60 கன அடி வெளியேற்றப்படுகிறது அணையில் இருந்து வினாடிக்கு 7 மதகுகள் மூலம் ஆயிரம் கன அடி தண்ணீர் ஆற்றின் வழியே வெளியேற்றப்படுகிறது.
எனவே, வைகை ஆற்றின் கரையோரங்களில் வசிப்பவர்களிடம் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu