ரயில்வேயில் கருணை அடிப்படையில் வேலையில் சேர்ந்தவர்களுக்கு காலநீட்டிப்பு
எம்.பி.சு.வெங்கடேசன்.
ரயில்வே துறையில் கருணை அடிப்படையில் வேலை சேர்ந்தவர்களுக்கு காலநீட்டிப்பு கோரிக்கையை ஏற்று உத்தரவிட்ட ரயில்வே அமைச்சருக்கு எம்.பி.சு.வெங்கடேசன் நன்றி தெரிவித்துள்ளார்.
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வெளியிட்ட செய்தி குறிப்பில், ரயில்வேயில் கருணை அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட காலம் பத்தாம் வகுப்பு குறைந்த கல்வி தகுதி உடையவர்கள் வேலையில் நியமிக்கப்பட்டார்கள். அவர்கள் பயிற்சியாளர்கள் என்ற பெயரில் நியமிக்கப்பட்டார்கள். அவர்களுக்கு நிரந்தர ஊழியருக்கான அனைத்து சலுகைகளும் வழங்கப்பட்டாலும் நிரந்தரம் அளிக்கப்படாமல் இருந்தது. அவர்கள் ஐந்து ஆண்டுகளில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி என்பது நிபந்தனையாக இருந்தது. கோவிட் போன்ற காரணங்களால் அவர்கள் இந்த கால அவகாசத்துக்குள் பத்தாம் வகுப்பு முடியாமல் வேலை நீக்கம் செய்யப்படும் அபாயம் இருந்தது.
இது குறித்து நான் ரயில்வே அமைச்சருக்கு அவர்களின் கல்வித்தகுதி நிபந்தனையை ஒரு முறை விிளக்கு அளித்து அவர்களை நிரந்தரம் செய்ய அல்லது அவர்களை கல்வித் தகுதி பெறுவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க உத்தரவிடுமாறு கேட்டுக் கொண்டேன். ரயில்வே அமைச்சர் எனக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் அவர்கள் பத்தாம் வகுப்பு தேர்வு அதற்கான கால அவகாசத்தை 2023 வரை நீட்டிக்க உத்தரவிட்டுள்ளதாக பதிலளித்துள்ளார். இதன் மூலம் கருணை அடிப்படையில் வேலையில் சேர்ந்த ரயில்வே ஊழியர்கள் பயனடைவார்கள். இந்த உத்தரவை நல்கிய ரயில்வே அமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த கோரிக்கையை எனது கவனத்துக்கு கொண்டு வந்த ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் சங்கத்துக்கு பாராட்டுக்கள் என்று குறிப்பிட்டுள்ளார்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu