மதுரையில் விஜய் ரசிகர்கள் வைத்த விளம்பர சுவரொட்டியால் பரபரப்பு
விஜய் ரசிகர்கள் மதுரையில் ஒட்டிய போஸ்டர்
2021 உள்ளாட்சியில் நல்ல தேர்வு - நீங்கள் தான் தமிழகத்தின் இறுதி தீர்வு' என்ற வாசகத்துடன் நடிகர் விஜய்யை முதல்வராகச் சித்தரித்து மதுரையில் அவரது ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டரால் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் எதிர்க்கட்சிகள் பெருவாரியான வெற்றியைப் பெற முடியாத சூழல் ஏற்பட்ட நிலையில், இதுவரை அரசியலில் களம் காணாத நடிகர் விஜய் மக்கள் மன்றம் கணிசமான வெற்றியைப் பெற்றுள்ள நிகழ்வு அரசியல் கட்சிகளைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. இந்த வெற்றியைத் தமிழகம் முழுவதும் உள்ள விஜய் ரசிகர்கள் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், மதுரையில் உள்ள நடிகர் விஜய்யின் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தின் இறுதி தீர்வு அந்த போஸ்டரில், நடிகர் விஜய் முதலமைச்சராகப் பதவியேற்பது போலச் சித்தரித்து, 2031ல் ஜோசப் விஜய் எனும் நான் உண்மையான நம்பிக்கையும், மாறா பற்றும் கொண்டிருப்பேன் என உறுதி கூறுகிறேன்' எனப் பிரமாணம் எடுக்கும் வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. மேலும், 2021 உள்ளாட்சியில் நல்ல தேர்வு- நீங்கள் தான் தமிழகத்தின் இறுதி தீர்வு என ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu