மதுரை முதல் ராமேஸ்வரம் வரை கூடுதலாக ரயில் இயக்க கோரிக்கை

மதுரை முதல் ராமேஸ்வரம் வரை கூடுதலாக ரயில் இயக்க கோரிக்கை
X
மதுரையில் இருந்து ராமநாதபுரம் வழியாக ராமேஸ்வரத்திற்கு கூடுதல் ரயில் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மதுரையில் இருந்து ராமநாதபுரம் வழியாக ராமேஸ்வரத்திற்கு தற்போது இரண்டு சிறப்பு ரயில் தினந்தோறும் இயக்கப்படுகிறது. இந்நிலையில் மதுரையில் இருந்து மாலை 6.10 மணிக்கு ராமேஸ்வரத்தில் இருந்து காலை 5.40 மணிக்கு ரயில்கள் புறப்படுகிறது. ராமநாதபுரத்தில் இருந்து மதுரைக்கு தினமும் காலை 6.50 மணிக்கு ராமேஸ்வரத்திற்கு இரவு 8.40 மணிக்கு செல்கிறது.

இவ்வழித்தடத்தில் ஏற்கனவே தினமும் ஆறுமுறை ரயில்கள் இயக்கப்பட்ட நிலையில் தற்போது இருமுறை மட்டுமே ரயில் இயக்குவதால் தொழிலாளர்கள், அரசு அலுவலர்கள், பள்ளி ,கல்லூரி மாணவர்கள் ரயிலில் பயணம் செய்ய முடியாமல் சிறமத்திற்க்கு ஆளாகியுள்ளனர்.

ஆகையால் வியாபாரிகள், அரசு மற்றும் தனியார் அலுவலர்கள், பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் நலனை கருத்தில். கொண்டு மதுரையில் இருந்து காலையிலும் ராமேஸ்வரத்திலிருந்து மாலை நேரங்களிலும் கூடுதலாக ரயில் இயக்கத்தை தென்னக ரயில்வே இயக்க முன்வரவேண்டும் என ராமேஸ்வரம் வாழ் மக்களும் மதுரை வாழ் மக்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது