/* */

கொரோனா தொற்று: மதுரை மாவட்ட காவல்துறை விழிப்புணர்வு பிரசாரம்

கொரோனா பரவலை தடுக்கும் முயற்சியாக பொதுமக்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வழங்கினார்

HIGHLIGHTS

கொரோனா தொற்று:  மதுரை மாவட்ட காவல்துறை விழிப்புணர்வு பிரசாரம்
X

 ஒத்தக்கடை பகுதியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.பாஸ்கரன், அப்பகுதியில் வந்த பொதுமக்களுக்கும், பேருந்தில் பயணித்த பொதுமக்களுக்கும் முகக் கவசங்களை வழங்கினார் 

மதுரை மாவட்டத்தில் கொரோனா தொற்றினைத் தடுப்பதற்காக மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.பாஸ்கரன் உத்தரவின் பேரில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன் அடிப்படையில் பொது மக்களுக்கு முகக்கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் மாவட்டம் முழுவதும் காவல் அதிகாரிகள் அனைவரும் பொதுமக்களுக்கு முகக் கவசம் உள்ளிட்ட உபகரணங்களை வழங்கி வருகின்றனர். இன்று ஒத்தக்கடை பகுதியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.பாஸ்கரன், அப்பகுதியில் வந்த பொதுமக்களுக்கும், பேருந்தில் பயணித்த பொதுமக்களுக்கும் முகக் கவசங்களை வழங்கி பொதுமக்கள் பொது இடங்களில் கடைபிடிக்கவேண்டிய நடைமுறைகளை பற்றி பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

அத்துடன் மதுரை மாவட்டத்தில் மேலும் பொதுமக்களுக்கு வேண்டிய விழிப்புணர்வு வழங்கி கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த மதுரை மக்களுக்கு அறிவுரை வழங்கவும் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார். மேலும் பொதுமக்களும் காவல்துறைக்கு தங்களுடைய ஒத்துழைப்பை நல்கி கொரானா பரவலை கட்டுப்படுத்த உதவிடுமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Updated On: 10 Jan 2022 3:00 PM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    மாதந்தோறும் ஊதியம் வழங்க கோரி தூய்மை பணியாளர்கள் கலெக்டரிடம் மனு
  2. வீடியோ
    🔴LIVE : டெல்லியில் Kejirwalai-யை கிழித்து தொங்கவிட்ட Annamalai...
  3. செங்கம்
    திருவண்ணாமலை மாவட்டத்தில் பனை ஓலை பாடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்...
  4. நாமக்கல்
    பாக்கு மரத்தில் கோடையில் பூச்சி நோய் கட்டுப்பாடு: 9ம் தேதி இலவச...
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை: பகவான் ரமண மகரிஷி ஆராதனை விழா
  6. ஈரோடு
    அந்தியூர் அருகே பர்கூரில் தொட்டியில் இருந்த தண்ணீரை குடித்து சென்ற...
  7. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  8. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  9. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  10. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!