மதுரையில் புதிய திட்டப்பணிகளுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்

மதுரையில் புதிய திட்டப்பணிகளுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்
X

நலத்திட்ட உதவிகளை வழங்கும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 

மதுரை மாவட்டத்தில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப் பணிகளை காணொளி காட்சி வாயிலாக பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார்

சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி காட்சி வாயிலாக, மதுரை மாவட்டத்தில் ரூ.49.74 கோடியில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.51.77 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப் பணிகளை பயன்பாட்டிற்கு துவக்கி வைத்து, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவை துவக்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

இதனிடையே, அமைச்சர்கள் மூர்த்தி மற்றும் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர் என்று இருவரையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டினார்.

விழாவில் 67831 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வழங்கினார். மேலும் 5.68 கோடியில் கட்டப்பட்டுள்ள ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை கட்டிடத்தை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார் .

இந்த நிகழ்வின் போது வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, மாவட்ட ஆட்சித் தலைவர், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story