மதுரை அல்அமீன் பள்ளி நூலகத்திற்கு 200 புத்தகங்களை அனுப்பி வைத்த முதல்வர்

மதுரை அல்அமீன் பள்ளி நூலகத்திற்கு   200 புத்தகங்களை அனுப்பி வைத்த முதல்வர்
X

மதுரை அல்அமீன் பள்ளி நூலகத்துக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் அனுப்பி வைத்த பத்தகங்கள்

நூலகத்திற்காக புத்தகங்களை வழங்குமாறு தமிழக முதல்வருக்கு கடிதம் மூலம் பள்ளி நிர்வாகிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்

மதுரை அல்அமீன் பள்ளி நூலகத்திற்கு உடனடியாக 200 புத்தகங்களை அனுப்பி வைத்த முதல்வர் ஸ்டாலின்

மதுரை புதூர் பகுதியில் அல்-அமின் அரசு உதவி பெரும் பள்ளியின் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது இந்த பள்ளியில் கிட்டத்தட்ட ஆயிரம் மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் இருக்கும் நூலகத்திற்காக புத்தகங்களை வழங்குமாறு தமிழக முதல்வருக்கு கடிதம் மூலம் பள்ளி நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோரிக்கையை ஏற்று ஒரு வாரங்களிலேயே தமிழக முதல்வர் இருநூறு ( 200 ) புத்தகங்களை பள்ளிக்கு வழங்கியுள்ளார் சுதந்திர போராட்ட தலைவர்களின் வாழ்க்கை வரலாறு, ஆங்கிலம் கற்றல் காண புத்தகங்கள் தமிழ் இலக்கியங் களுக்கான புத்தகங்கள் இதிகாசங்கள், கலைஞர், அண்ணா வாழ்க்கை வரலாறு உள்ளிட்ட புத்தகங்களை அனுப்பி வைத்துள்ளார். முதல்வரின் இத்தகைய செயலுக்கு பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் மற்றும் அனைத்து மாணவர்களும் நன்றியை தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story
பவானி வர்த்தக மையத்தில் புதிய பாக்கு சீசன் தொடக்கம்