தூத்துக்குடி ரயில் போக்குவரத்தில் மாற்றம்: தென்னக ரயில்வே மதுரை கோட்டம் அறிவிப்பு

தூத்துக்குடி ரயில் போக்குவரத்தில் மாற்றம்: தென்னக ரயில்வே மதுரை கோட்டம் அறிவிப்பு
X
பலத்த மழை காரணமாக தூத்துக்குடி ரயில் நிலையத்தில் ரயில் பாதையில் மழைநீர் தேங்கி உள்ளதால் ரயில் போக்குவரத்தில் மாற்றம்.

பலத்த மழையால் ரயில் போக்குவரத்தில் மாற்றம்.

தென்னக ரயில்வே மதுரைக் கோட்டம் அறிவிப்பு பலத்த மழை காரணமாக தூத்துக்குடி ரயில் நிலையத்தில் ரயில் பாதையில் மழைநீர் தேங்கியுள்ளது எனவே ரயில் போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன

அதன்படி வண்டி 06667 தூத்துக்குடி to திருநெல்வேலி சிறப்பு ரயில் முழுமையாக இன்று நவம்பர் 26 ரத்து செய்யப்படுகிறது.

தூத்துக்குடியிலிருந்து இன்று மாலை 05.15 மணிக்கு புறப்பட வேண்டிய வண்டி எண் 16235 தூத்துக்குடி to மைசூர் எக்ஸ்பிரஸ் மற்றும் தூத்துக்குடியில் இருந்து இன்று 08:15 மணிக்கு புறப்பட வேண்டிய வண்டி எண 12 694 தூத்துக்குடி சென்னை முத்துநகர் எக்ஸ்பிரஸ் ஆகியவை தூத்துக்குடி மீளவிட்டான்(0 7.67 )கிலோமீட்டர் ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு மீளவிட்டான் ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்