கோவில்பட்டி முதல் துலுக்கப்பட்டி வரை ரயில் போக்குவரத்தில் மாற்றம்: ரயில்வே அறிவிப்பு

கோவில்பட்டி முதல் துலுக்கப்பட்டி வரை  ரயில் போக்குவரத்தில் மாற்றம்: ரயில்வே அறிவிப்பு
X

பைல்

கோவில்பட்டி -துலுக்கப்பட்டி ரயில் நிலையங்களுக்கு இடையே இரட்டை ரயில் பாதை இணைப்பு பணிகளுக்காக ரயில் போக்குவரத்து மாற்றம்

இரட்டை ரயில்பாதை இணைப்புப்பணிகளுக்காக கோவில்பட்டி துலுக்கப்பட்டி இடையேயான ரயில் போக்குவரத்தில் சில மாற்றங்கள் தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

மதுரை- கோவில்பட்டி -துலுக்கப்பட்டி ரயில் நிலையங்களுக்கு இடையே இரட்டை ரயில் பாதை இணைப்பு பணிகள் நடைபெற இருப்பதால் ரயில் போக்குவரத்தில் சில மாற்றங்கள்.செய்யப்பட்டுள்ளன.

1,மார்ச் 25 முதல் 29 வரை மற்றும் ஏப்ரல் 1 ஆகிய நாட்களில் தாம்பரத்தில் இருந்து புறப்படும் தாம்பரம்-நாகர்கோவில் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் (16191) விருதுநகர்- நாகர்கோவில் ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படும்.மேலும் மார்ச் 30 மற்றும் 31 ஆகிய நாட்களில் தாம்பரத்தில் இருந்து புறப்படும் இந்த ரயில் மதுரை- நாகர்கோவில் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

2, மறுமார்க்கத்தில் மார்ச் 26 முதல் 30 வரை மற்றும் ஏப்ரல் 2 அன்று நாகர்கோவிலில் இருந்து புறப்படும்.

நாகர்கோவில்- தாம்பரம் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் (16192) நாகர்கோவில் விருதுநகர் ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படும்.மேலும் மார்ச் 31 ஏப்ரல் 1 ஆகிய நாட்களில் நாகர்கோவிலில் இருந்து புறப்பட வேண்டிய தாம்பரம் அந்தியோதயா எக்ஸ்பிரஸ்( 16192 )நாகர்கோவில் மதுரை இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு மதுரையிலிருந்து வழக்கமான நேரத்தில் புறப்படும்.

3, மார்ச் 26 முதல் ஏப்ரல் 2ம் தேதி வரை நாகர்கோவிலில் இருந்து புறப்படும் நாகர்கோவில்- கோயம்புத்தூர் பகல் நேர எக்ஸ்பிரஸ் (16321) நாகர்கோவில் -மதுரை இடையே பகுதியாக ரத்து செய்யப்படும்.

4, மார்ச் 26 முதல் ஏப்ரல் 2 வரை கோயம்புத்தூரில் இருந்து புறப்படும் கோயம்புத்தூர் -நாகர்கோவில் பகல் நேர எக்ஸ்பிரஸ்( 16372 )மதுரை நாகர்கோவில் ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படும்..

5 மார்ச் 25 முதல் 31 வரை குருவாயூரில் இருந்து புறப்பட வேண்டிய குருவாயூர்- சென்னை -எழும்பூர் எக்ஸ்பிரஸ் (16128) திருநெல்வேலி -சென்னை- எழும்பூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

ஏப்ரல் 1 அன்று குருவாயூரில் இருந்து புறப்பட வேண்டிய சென்னை எக்ஸ்பிரஸ் (16128 )அம்பாசமுத்திரம், தென்காசி, ராஜபாளையம் ,,விருதுநகர் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும்.

6 ,மார்ச் 26 முதல் ஏப்ரல்1 வரை சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய சென்னை -எழும்பூர் -குருவாயூர் எக்ஸ்பிரஸ்( 16127 )சென்னை- திருநெல்வேலி இடையே பகுதியாக ரத்து செய்யப்படும்.

7, மார்ச் 26 முதல் ஏப்ரல் 2 வரை திருச்சி- திருவனந்தபுரம்- திருச்சி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்( 22627 )-(22628 )முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

8, மார்ச் 26 முதல் ஏப்ரல் 2 வரை பாலக்காடு- திருச்செந்தூர்- பாலக்காடு எக்ஸ்பிரஸ் (16731 )-(16732 )விருதுநகர், ராஜபாளையம், தென்காசி, அம்பாசமுத்திரம் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும்.

9, மார்ச் 28 முதல் ஏப்ரல் 2 வரை மதுரையில் இருந்து புறப்பட வேண்டிய மதுரை புனலூர் எக்ஸ்பிரஸ் (16729) மதுரை ஹ்திருநெல்வேலி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.மறுமார்க்கத்தில் மார்ச் 28 முதல் ஏப்ரல் 1 வரை புனலூரில் இருந்து புறப்பட வேண்டிய புனலூர் மதுரை எக்ஸ்பிரஸ் (16730) திருநெல்வேலி -மதுரை ரயில் நிலையங்கள் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது..

10, மார்ச் 25 முதல் ஏப்ரல் 1 வரை மைசூரில் இருந்து புறப்பட வேண்டிய மைசூர் தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் (16236) விருதுநகர்- தூத்துக்குடி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.மறுமார்கத்தில் மார்ச் 29 ஏப்ரல் 2 வரை தூத்துக்குடியில் இருந்து புறப்பட வேண்டிய தூத்துக்குடி- மைசூர் எக்ஸ்பிரஸ் (16235)தூத்துக்குடி -விருதுநகர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

11, மார்ச் 26 ,29, 30 ஆகிய நாட்களில் மும்பை தாதரில் இருந்து புறப்படும் திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் (11021)விருதுநகர் -திருநெல்வேலி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.மறுமார்க்கத்தில் 28 ,31 ஏப்ரல் 1 ஆகிய நாட்களில் திருநெல்வேலியில் இருந்து புறப்படும் திருநெல்வேலி தாதர் எக்ஸ்பிரஸ் (11022) திருநெல்வேலி- விருதுநகர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

12,- மார்ச் 27 அன்று புதுச்சேரியில் இருந்து புறப்பட வேண்டிய புதுச்சேரி கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் (16861) மற்றும் மார்ச் 28 அன்று கன்னியாகுமரியில் இருந்து புறப்பட வேண்டிய கன்னியாகுமரி- புதுச்சேரி எக்ஸ்பிரஸ் (16862) ஆகியவை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

13, மார்ச் 22 மதுரை கோட்ட பகுதியில் வரும் காஷ்மீர் ஸ்ரீ வைஷ்ணவ தேவி கட்ரா திருநெல்வேலி எக்ஸ்பிரஸ்( 16788) விருதுநகர் -தென்காசி வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும் என மதுரை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு